Thursday, 9 August 2018

மாபெரும் சிரமதானத்துக்கான அழைப்பு..


பனங்காடு வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் எதிர் வரும் 12.08.2018 ஞாயிற்றுக் கிழமை காலை மு. ப காலை 6.30 மணியளவில் இவ்வளவு காலமாக கவனிப்பாரற்று கிடந்த வைத்தியசாலையையும், சுற்றுப்புற சூழலையும் சுத்தம் செய்ய எண்ணியுள்ளோம்..

எனவே பனங்காட்டில் உள்ள விளையாட்டுக் கழகம், இளைஞர்கள், மாதர் சங்கம், ஆட்டோ சாரதிகள், கிராம நலன் விரும்பிகள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள சமூக நலன் விரும்பிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பனங்காடு வைத்தியசாலையை துப்புரவு செய்யும் பணியில் இணையுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இது நமது வைத்தியசாலை...
இதை பேணிப் பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும்..
ஏற்பாடு -பனங்காடு வைத்தியசாலை புதிய அபிவிருத்தி குழு

No comments: