Thursday, 2 August 2018

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.


மட்டக்களப்பு, ஆயித்தியமலை பிரதேசத்திற்குட்பட்ட, நெல்லூர் கிராமத்தில் சற்று முன்னர் மாலை 8 மணி வேளையில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.


மாமாங்கம் சண்முகம் என்பவரே மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இவ் யானைத் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

மக்கள் வாழும் கிராமத்திற்குள் புகும் யானைகளால் பெரும் இன்னல்களை அனுபவித்தவாறே மக்கள் தமது உயிரையும் பறிகொடுத்து பயிர் விவசாய 
பின்னடைவுகளையும் சந்திக்கின்றனர், மேலும் தமது குடும்ப உறவுகளை இழந்து அநாதரவாக்கப் படுகின்ற பரிதாப நிலைமையும் உருவாகின்றது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு இன்னும் தகுந்த பாதுகாப்பு வேலைகள் நடந்தபாடில்லை, இக் கிராமங்களில் வீதி மின் விளக்குகள் மற்றும் பாதை வசதிகள் அமைத்துக் கொடுப்பதுடன் யானைகளில் இருந்து பாதுகாக்க மின் வேலி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் செய்துகொடுக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.

இதற்கு சம்மந்தப்பட்ட மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபை உள்ளூராட்சி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும்.
மட்டக்களப்பு நெல்லூர் கிராமத்தில் சற்று முன்னர் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு !! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: