Tuesday, 2 June 2015

விபத்தில் படுகாயமடைந்து மூவரில் மற்றுமொருவர் மரணமானார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து மூவரில் சிகிச்சை பெற்று வந்த சின்னபனங்காட்டைச் சேர்ந்த 61வயதுடைய வல்லிபுரம் சோதிநாயகம் எனும் மற்றுமொருவர் இன்று(01) மரணமானார்.

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தம்பட்டை பிரதேசத்தில் கடந்த (20)ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் பனங்காட்டைச் சேர்ந்த 35வயதுடைய விநாயகமூர்த்தி விஜயகுமார்  முன்னதாக பலியான நிலையில் மற்றய இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி  இவர் மரணமடைந்துள்ளார்;.



தம்பட்டை பகுதியில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் அருகில்; சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதிக் கொண்டதினாலேயே இச்சம்பவம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments: