கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் (08) இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை மீறி காருடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கல்முனையிலிருந்து சம்மாந்துறையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த காருடன், மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment