தம்வசம் 270 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் 54 வயது பெண்ணொருவரை பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 14ஆம் கட்டை குளனுகே பிரதேசத்தில் பொத்துவில் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர். தமக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் இப்பெண்ணின் வீட்டை சோதனையிட்டனர். இதன்போது, கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment