அம்பாறை, மஹாஓயா பொலிஸ் பிரிவிலுள்ள நுவரகலதென்னவிலுள்ள வனப்பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த மூவரை கைது செய்துள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரகலதென்ன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை புதையல் தோண்டிக்கொண்டிருந்தபோதே குறித்த நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று தெரிவித்த பொலிஸார், மாலபே பகுதியைச் சேர்ந்த மனம்பேரி ஜயவர்தன (வயது 36), கண்டி ஹதரலியத்தவை சேர்ந்த ஆர்.ஈ.எம். திலக் ருஷாந்த ராஜகருணா (வயது 41) மற்றும் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த கனத்த மானகே உபுல் சந்தன (வயது 43) என்றும் கூறினர்.
சந்தேக நபர்களை தெஹியத்கண்டிய நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment