அக்கரைப்பற்று -அம்பாறை வீதி 6ஆம் கட்டைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்ததாக அம்பாறை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்றபோது, சட்டவிரோதமாக உழவுஇயந்திரத்தில் மணல் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து உழவுஇயந்திரத்தை கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment