Wednesday, 10 June 2015

போதைப்பொருள் வைத்திருந்த பெண் கைது

அட்டாளைச்சேனை, கப்பலடி கடற்கரை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணை நேற்று செவ்வாய்க்கிழமை (09) அக்கரைப்பற்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோதே அவரிடமிருந்து இரண்டு கஞ்சா பொதிகள் கைப்பற்றிதுடன் பெண்ணையும் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று புதன்கிழமை (10) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments: