பொத்துவில், ரொட்டை பிரதேச்ததில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் அக்கரைப்பற்று பதுர் நகரை சேர்ந்த ஜப்பார் நௌசாத் (வயது 35) மரணமடைந்துள்ளதுடன், மட்டக்களப்பைச் சேர்ந்த மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி இவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment