Wednesday, 10 June 2015

மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரை

அம்பாறை, அட்டாளைச்சேனை  கோணாவத்தை கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளொன்று  இனந்தெரியாதோரினால் நேற்று  செவ்வாய்க்கிழமை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
.மோட்டார் சைக்கிள்  எரிவதைக் கண்ட பொதுமக்கள், தீயை  அணைக்க முற்பட்டபோதிலும், அதைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள், சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியுடையது என அதன் உரிமையாளர் ஏ.எம்.ஹுசைன் தெரிவித்தார்.
இந்த மோட்டார் சைக்கிளை திருத்துவதற்காக கொண்டுசென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
 சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments: