Thursday, 4 June 2015

கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்தவர் கைது

வி.சுகிர்தகுமார்

  திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை  பணத்துக்கு கொள்வனவு செய்ததாகக் கூறப்படும்   27 வயதுடைய ஒருவரை  நேற்று வியாழக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தனது கையடக்கத் தொலைபேசி திருட்டு போயுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டில்  தனது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார்,  நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று பாவனையிலிருந்த கையடக்கத் தொலைபேசியின் இலக்கத்தை கண்டறிந்து பாவனையாளரை பொலிஸ் நிலையத்துக்கு  அழைத்து விசாரணை செய்து கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்  6,000 ரூபாய்க்கு  இன்னுமொருவரிடமிருந்து  கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்தமை தெரியவந்தது. சந்தேக நபர்  வழங்கிய தகவலை அடுத்து விற்பனை செய்தவரையும் கைதுசெய்வதற்கான நடிவடிக்கையினை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார்; தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/147646#sthash.mNRGK5Kn.dpuf

No comments: