அம்பாறை மாவட்ட அரச வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் தமக்கும் மானிய அடிப்படையில் மோட்டார்சைக்கிள் வழங்க கோரி, இன்று புதன்கிழமை (10) அம்பாறை நகரில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்தனர். அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் கமநல சேவை உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த அரசாங்கத்தினால் வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கான மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள்; வழங்கும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட வெளிக்கள அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் 50,000 ரூபாய் செலுத்தாமல் மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரையிலும் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்ட செயலகத்துக்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்ததையடுத்து இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக அரசாங்க அதிபர் வணிகசூரிய தெரிவித்தார்
No comments:
Post a Comment