அம்பாறை, ஆலிம் நகர் பிரதேசத்திலுள்ள திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்தை சுற்றி அமைப்பட்டிருந்த யானைத்தடுப்பு மின்சாரவேலி இன்று புதன்கிழமை(03) அதிகாலை காட்டு யானைகளினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக திண்மக்கழிவு சேகரிப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மின்னல் தாக்கம் காரணமாக இந்த யானைத்தடுப்பு மின்சாரவேலிக்கு மின்விநியோகித்துவந்த மின்பிறப்பாக்கி செயலிழந்தது. இதைத் தொடர்ந்து இந்த வேலிக்கு மின்விநியோகம் தடைப்பட்டது. இந்நிலையிலேயே, யானைத்தடுப்பு மின்சாரவேலியை உடைத்துக்கொண்டு திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தினுள் யானைகள் உள்நுழைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment