அக்கரைப்பற்று பிரதேசத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (21) கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதிபதி மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment