அம்பாறை, பொத்துவில் பிரதேசத்துக்கான விஜயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை சனிக்கிழமை (20) காலை 10 மணிக்கு மேற்கொள்ளவுள்ளார். இங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்துக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்ட முகுது மகா விகாரையை திறந்து வைக்கவுள்ளார். சுமார் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்விகாரைக்கான அடிக்கல்லினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நட்டு வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி வருகை தரும் இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே, நாடாளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்தின மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொத்துவில் பிரதேசதமெங்கும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளத
No comments:
Post a Comment