Tuesday, 11 August 2015

விபத்தில் நபர் உயிரிழப்பு


திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பொத்துவீல் வீதி  காஞ்சிரம்குடா சந்திப்பகுதியில் நேற்று  திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள்  விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான  நிலையில் அம்மாறை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர்  உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கிராம சேவையாளராக கடமையாற்றும் 42 வயதுடைய ப.பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார். எதிர்பாராத விதமாக வீதியில் குறுக்கிட்ட  மாடு ஒன்றில் மோதியதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரனையிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த நபர், திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

No comments: