Friday, 14 August 2015

பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் சட்ட விதிகளை மீறியோர் கைது

பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் தேர்தல் துண்டுப்  பிரசுரங்களை வாகனத்தில் கொண்டு சென்றமை மற்றும்  தேர்தல் பிரசுரங்களை விநியோகித்த இருவரை  இன்று (14) அதிகாலை 2.30 மணிக்கு பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  வேட்பாளர் ஒருவரின் இலக்கம் மற்றும் புகைப்படம் பொறிக்கப்பட்ட 65 சிறிய அட்டைகள், 550 மாதிரி வாக்குச் சீட்டுகள் மற்றும் வாகனம் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன

No comments: