அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடல் மணல் ஏற்றியமை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை (27) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கடல் மணல் ஏற்றிய நபருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் இன்று (28) வெள்ளிக்கிழமை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment