Tuesday, 25 August 2015

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை, நேற்று செவ்வாய்க்கிழமை (25) பதவிப்பிரமாணம் செய்வதாக இருந்த போதிலும், தற்போது அது பிற்போடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, நாளை வியாழக்கிழமையும் (27) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையுமே (28) புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கத்துக்கான அமைச்சரவை விடயதானங்களை நியமிப்பது தொடர்பான பணிகள் தற்போது பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. இதற்கானப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்றன. இருப்பினும், அமைச்சரவைக்கான விடயதானங்கள் குறித்து தொடர்ந்தும் ஆழமாகச் சிந்தித்து திர்மானம் எடுக்க வேண்டி உள்ளதாகவும் இதனாலேயே அமைச்சரவைப் பதவிப்பிரமாணம் நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments: