அவுஸ்திரேலியாவில் சமஷ்டி ஆட்சி பின்பற்றப்படும்போது இரு மொழிபேசும் இலங்கையில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சமஷ்டி அரசே எங்களது தீர்வு என எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறப்பட்டதன் பின்னர் தென்பகுதியில் இனவாத குழுக்கள் இவ்விஞ்ஞாபனத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளன. அப்படி என்றால் 60வருடங்களாக உரத்த குரலில் நாம் கூறி வந்த விடயத்தை அவர்கள் அறிந்தும் அறியாதது போல் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அறியாமல் மாற்றுக் கட்சிகளிடம் சோரம் போயுள்ள எமது சமூகத்திலுள்ளோர் இதனை உணர்ந்து மீண்டும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment