நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 465,757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்மாவட்டத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலிண விக்கிரமரத்ன தெரிவித்தார்.
அம்பாறை தேர்தல் தொகுதியில் 161,999 பேரும்
சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 80,357 பேரும்
கல்முனை தேர்தல் தொகுதியில் 71,254 பேரும்,
பொத்துவில் தேர்தல் தொகுதியில் 152,147 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்களாக
அம்பாறைத் தொகுதியில் 160 நிலையங்களும்
பொத்துவில் தொகுதியில் 151 நிலையங்களும்
சம்மாந்துறை தொகுதியில் 87 நிலையஙகளும்
, கல்முனைத் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களுமாக
மொத்தம் 464 நிலையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது வாக்குப் பெட்டிகள் உரிய நிலையஙகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மாவட்டத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலிண விக்கிரமரத்ன தெரிவித்தார்.
No comments:
Post a Comment