Tuesday, 4 August 2015

மினி சூறாவளி

அம்பாறை மாவட்ட  அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்கள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மழையுடன் வீசிய மினி சூறாவளி காரணமாக 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 
 திங்கட்கிழமை (03) மாலை ஏற்பட்ட மினிசூறாவளியால், பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பலத்த சூறாவளியினால், அட்டாளைச்சேனையில் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்  வாகனங்களும் சேதங்களுக்குள்ளாகியது. இதனால் அட்டாளைச்சேனை - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்து சற்று நேரம் தடைப்பட்டு காணப்பட்டது. பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. 

திங்கட்கிழமை (03) மாலை வீசிய இந்த மினி சூறாவளியினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 13 வீடுகள்; பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அட்டாளைச்சேனை அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.மிஸ்பாஹ் தெரிவித்தார். இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மரக்கிளைகள் முறிந்து விழுந்ததினால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் முகம்மட் சியாம் கூறினார். மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், வீடுகள், கடைகளின் ஓடுகள், சீற் மற்றும் தகரங்கள் காற்றினால் அள்ளுண்டன. மேலும், மரங்கள் முறிந்து விழுந்ததினால்; மின்சாரக் கம்பிகள் அறுந்ததை தொடர்ந்து  சற்றுநேரம் மின்விநியோகம் தடைப்பட்டு, பின்னர் வழமைக்கு திரும்பியது,    - 

No comments: