Monday, 17 August 2015

கல்முனையில் மூன்று பேர் கைது.

  போலியான வாக்குச்சீட்டுக்கள், தேர்தல் சுவரொட்டிகள், வேட்பாளர் விளம்பர அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தேர்தல் தினமான இன்று திங்கட்கிழமை அதிகாலை கல்முனையில் மூன்று பேரை கைதுசெய்ததாக  கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் சட்டங்களை மீறி இவர்கள் மோசடியான வாக்குச் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என்று பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தேர்தல் கண்காணிப்பு விசேட ரோந்துப் பொலிஸார் 54, 49, 32 வயதுகளையுடைய இவர்களை கைதுசெய்தனர். இந்த சந்தேக நபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி உட்பட 327 போலி வாக்குச்சீட்டுக்கள், 890 வேட்பாளர் விளம்பர அட்;டைகள், ஏழு பெரிய மற்றும் சிறிய சுவரொட்டிகள் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். இந்தச் சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: