கிழக்கு மாகாணத்திலிருந்து இந்தமுறை ஆறு புதுமுகங்கள் தெரிவாகியுள்ள அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தோல்வி அடைந்துள்ளனர். இந்த மாகாணத்திலிருந்து தெரிவான 16 உறுப்பினர்களில் ஏழு முஸ்லிம்களுடன் ஐந்து தமிழர்களும் நான்கு சிங்களவர்களும் அடங்குகின்றனர். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக ஐந்து தமிழர்கள் தெரிவாகியிருந்தமை போன்று இந்தமுறையும் தெரிவாகியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நான்கு உறுப்பினர்களை பெற்றிருந்தது. இந்தமுறையும் அதே எண்ணிக்கையே பெற்றுள்ளது. தேர்தலில் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பழைய முகம்;களில் சில தோல்வி அடைந்துள்ள அதேவேளை, அந்த இடத்தை புதுமுகங்கள் தக்கவைத்துக்கொண்டுள்ளன. திருகோணமலை மாவட்டம் இம்றான் மஹ்றூப் (ஐ.தே.க), ஏ.எம்.மஹ்றூப் (ஐ.தே.க), இரா.சம்பந்தன் (த.தே.கூ), சுசந்த புஞ்சிநிலமே (ஐ.ம.சு.மு) குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இரா.சம்பந்தன், சுசந்த புஞ்சிநிலமே ஆகியோர் 2010 இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தெரிவாகியிருந்தனர். ஏ.எம்.மஹ்றூப் (ஐ.தே.க) 2010 க்கு முன்னைய காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ள அதேவேளை, இம்றான் மஹ்றூப் புதுமுகமாக தெரிவாகியுள்ளார்;. மட்டக்களப்பு மாவட்டம் என்.ஸ்ரீநேசன் (த.தே.கூ), எஸ்.வியாளேந்திரன் (த.தே.கூ), எஸ்.யோகேஸ்வரன் (த.தே.கூ), எம்.எஸ்.எஸ்.அமீர் அலி (ஐ.தே.க), அலிஸாஹிர் மௌலானா (ஸ்ரீ.ல.மு.கா) இவர்களில் என்.ஸ்ரீநேசன், எஸ்.வியாளேந்திரன் இருவரும் நாடாளுமன்றத்துக்கு புதுமுகங்களாக பிரவேசிக்கின்றார்கள்.
அலிஸாஹிர் மௌலான 2005; க்கு முன்னதாகவும் 2010 இல் எஸ்.யோகேஸ்வரனும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்கள். அம்பாறை மாவட்டம் தயா கமகே (ஐ.தே.க), பைஷல் காசிம் (ஐ.தே.க), எச்.எம்.ஹாரீஸ் (ஐ.தே.க), எம்.மன்சூர் (ஐ.தே.க), சிறியாணி விஜேவிக்கிரம (ஐ.ம.சு.மு), விமலவீர திஸநாயக்க (ஐ.ம.சு.மு), ரொபின் கோடிஸ்வரன் (த.தே.கூ) இவர்களில் பைஷல் காசிம், எச்.எம்.ஹாரிஸ், சிறியாணி விஜேவிக்கிரம, 2010 நாடாளுமன்றத் தேர்தலிலும் விமலவீர திஸநாயக்க 2005 தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியிருந்தனர். ஏனைய மூவரும் புதுமுகங்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கின்றார்கள். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவாகியிருந்த 14 பேரில் 12 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டபோதிலும், ஏழு பேர் இம்முறை தெரிவாகும் வாய்ப்பை இழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பி;.செல்வராசா (த.தே.கூ), பா.அரியநேத்திரன் (த.தே.கூ), எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (ஐ.ம.சு.மு) அம்பாறை மாவட்டத்தில் ஏ.ஏல்.அதாவுல்லா (ஐ.ம.சு.மு), பி.பியசேன (ஐ.ம.சு.மு), சரத் வீரசேகர (ஐ.ம.சு.மு), பி;.தயாரட்ன (ஐ.தே.க) 1977 தொடக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வந்த இவர் இம்முறைதான் தோல்வியை தழுவியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் எம்.எஸ்.தௌபீக் (ஸ்ரீ.ல. மு.கா) ஆகியோர் தோல்வி அடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர். அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவான பைஷல் காசிம், எச்.எம்.ஹரீஸ் மற்றும் எம்.மன்சூர் ஆகிய மூவரும் ஸ்ரீ.ல.மு.கா சார்பாகவும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவான ஏ.எம்.மஹ்றூப் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் ஐ.தே.க. வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment