க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (04) ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
309,069 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அவர்களில் 236,072பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 72,997 பேர் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடுபூராவும் 2,180 பரீட்சை மத்திய நிலையங்களும் 303 இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்த ஆணையாளர்;, பரீட்சை கடமைகளில் 22,000பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment