அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டைப் பிரதேசத்தில் 16- ஞாயிற்றுக்கிழமை பஸ் மிதிபலகையில் நின்று பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் தவறி விழுந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருக்கோவிலைச் சேர்ந்த எஸ்.சிவதாசன் (வயது 34) என்பவரே காயமடைந்துள்ளார்.
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் மேற்படி நபர் பயணித்துக்கொண்டிருந்தபோதே, இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.
காயமடைந்த நபர் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
No comments:
Post a Comment