அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார காரியாலயத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை திங்கட்கிழமை (10) இரவு கைதுசெய்ததாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் தயா கமகேவுக்கு ஆதரவு தெரிவித்து பொத்துவில் ஆர்.எம்.நகர் 17ஆம் பிரிவில் திறந்துவைக்கப்பட்ட தேர்தல் பிரசாரக் காரியாலயம் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு சேதமாக்கப்பட்டதாக பொத்துவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை செய்த நிலையில், சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
Tuesday, 11 August 2015
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார காரியாலயத்தை சேதப்படுத்தியவர் கைது
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார காரியாலயத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை திங்கட்கிழமை (10) இரவு கைதுசெய்ததாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் தயா கமகேவுக்கு ஆதரவு தெரிவித்து பொத்துவில் ஆர்.எம்.நகர் 17ஆம் பிரிவில் திறந்துவைக்கப்பட்ட தேர்தல் பிரசாரக் காரியாலயம் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு சேதமாக்கப்பட்டதாக பொத்துவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை செய்த நிலையில், சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment