Monday, 31 August 2015

எதிர்க்கட்சித் தலைவர்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும் விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அது நாடாளுமன்றத்துக்கு உரித்தான விடயமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளா

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூன்று பேர கைது

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வீடுகளுக்கு மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று பேரை திங்கட்கிழமை (31) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 அக்கரைப்பற்று பொலிஸாருடன் இலங்கை மின்சார சபையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

 இவர்களில் இரண்டு பேர் மின்வாசிப்புமானியில் குளறுபடி செய்து மின்னிணைப்பை பெற்றுள்ளதுடன், மற்றைய நபர் மின்கம்பியில் கொழுவி மின்னிணைப்பை பெற்றுள்ளதாகவும்  பொலிஸார்; கூறினர்

இவர்களை நீதிமன்றில்ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன்  இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் 



8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை (01) காலை 9.00 மணி முதல் 3.30 மணிவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் பதவிப்பிரமாணங்களை செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சரவையின் பிரதி பேச்சாளரும் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த தலைவர் கரு ஜயசூரியவினால், புதிய அமைச்சரவைக்கு பொருத்தமான பேச்சாளர் தொடர்பாக முன்மொழியப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Sunday, 30 August 2015

வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வேன் தயா கமகே

அம்பாறை மாவட்ட பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான செயற்திட்டத்தை அனோமா கமகே முன்னெடுப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளர் எம்.எம். முஹம்மட் நிஸாம் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் பெண்கள் சார்பாக அனோமா கமகேயை நியமித்துள்ளார். அவர் பெண்கள் அமைப்போடு இணைந்து குறிப்பாக அம்பாறை மாவட்ட பெண்களுக்காக பாடுபடுவார். மேலும்,நான் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றவுடன் எனக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வேன் என்றார். 

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பள்ளக்காடு களியோடை ஆற்றில் நேற்று சனிக்கிழமை மாலை சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆலையடிவேம்பு,அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய  குற்றத் தடுப்பு பிரிவினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த மூவரும் உழவு இயந்திரத்தின் இழுவைப்பெட்டியில் ஆற்று மண் ஏற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Friday, 28 August 2015

களுதாவளை பிள்ளையாh; ஆலயத்திற்கு அருகில் விபத்து

திருக்கோவில் பொலிஸ் பிhpவிற்குட்பட்ட களுதாவளை பிள்ளையாh; ஆலயத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதி வளைவில் இன்று (30)அதிகாலை பயணித்த டொல்பின் வாகனம் வீதியை விட்டுவிலகி முன்னால் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் முன்பகுதி முற்றாக உடைந்து பலத்த சேதத்துக்குள்ளாகியூள்ளது.
வாகனம் தொலைபேசி கம்பத்துடன் மோதி வீட்டு மதிலினையூம் உடைத்து உட்சென்றுள்ளது.

கொழும்பிற்கு சென்று பயணிகளை விட்டுவிட்டு அக்கரைப்பற்றிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
வாகனத்தின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கம் காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என திருக்கோவில் பொலிசாh; தொpவித்தனா;.
வாகனத்தின் பயணிகள் யாரும் இல்லாத நிலையில் முன்பகுதி தொலைபேசி கம்பத்துடன் மோதி நிறுத்தப்பட்டு பாhpய சேதம் ஏற்பட்டபோதும் சாரதி தெய்வாதீனமாக சிறுகாயங்களுடன் தப்பினாh;.
விபத்து தொடா;பான விசாரணைகளை  திருக்கோவில் பொலிசாh; மேற்கொண்டு வருகின்றனா;.

இந்துக்களின் வரலெட்சுமி விரதம் நடேசரபிஷேகங்கள் இன்று(28) வெள்ளிக்கிழமை




பொருளில்லாதோருக்கு இவ் உலகில்லை அருளில்லாதோர்க்கு அவ்வுலகில்லை என்பதற்கு அமைவாக இன்று இந்த கலியுகத்தில் மானிடர்களை சீர்தூக்கிப்பார்க்கும் செல்வத்திற்கு அதிபதியான மகாலஷ்மிக்குரிய விரதமான வரலெட்சுமி விரதம் சகல வீடுகள் மற்ரும் ஆலயங்களில் சிறப்பாக இடம் பெறுகின்ற இதே நேரம் அபிஷேகப் பிரியரானா நடராஜப் பெருமானுக்கு ஓராண்டில் இடம் பெறும் ஆறு சிறப்பு அபிஷேகங்களில் ஒன்றான ஆவனிமாத வளர்பிறை சதுர்த்ததியான இன்று நடேசரபிஷேகமும் இடம் பெறுகின்றது.


ஆவனி மாத பூரனைக்கு முந்திய வெள்ளிக் கிழமையான இன்று பெண்களால்   வரலெட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுவது சகலவிதமான செல்வயோகங்கள் செளபாக்கியங்கள் புத்திரப்பேறு கன்னிப்பெண்களுக்கு மனம் ஒத்த கனவன் போண்ற சகல ஜஸ்வரியம்களை வேண்டி வீடுகளிலும் ஆலயம்களிலும் இவ் விரதத்தினை நோற்பர்

ஒன்பது ஆண்டுகள் தொடர்சியாக ஆனுஷ்டித்தல் விரதத்தின் நியதியும் பெண்களுக்கு சிறப்புமாகும் 



கடல் மணல் ஏற்றிய நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்


அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடல் மணல் ஏற்றியமை தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை (27) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். 

கடல் மணல் ஏற்றிய நபருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் இன்று (28) வெள்ளிக்கிழமை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். 


கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

Thursday, 27 August 2015

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தப்பியது இலங்கை?

செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கைக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு  உள்ளகப் பொறிமுறையொன்றை வலியுறுத்தவுள்ளதாகவும் அமெரிக்கா நேற்று புதன்கிழமை (26) அறிவித்தது.

 இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இறுதி அமர்வின் போது யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. அத்துடன், எதிர்வரும் செம்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கை மீதான சர்வதேச பொறிமுறையொன்று கொண்டுவரப்படும் என அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற அமர்வின் போது அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் மூன்று யோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் மூன்றாவது யோசனையாகவும் காணப்பட்டது. இந்நிலையில், இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (25) இலங்கை வந்தடைந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அன்றைய தினம் மாலை சந்தித்து கலந்துரையாடிய போது, 'இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளக விசாரணையொன்றை நடத்துவதாக' ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்த உறுதிமொழி தொடர்பில் நேற்று அமெரிக்கா திரும்புவதற்கு முன்னர் சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிஸ்வால் தெளிவுபடுத்தியதுடன், அமெரிக்காவின் புதிய பரிந்துரைகள் என்னவென இதுவரையில் வெளியாகவில்லை என்றும் அது, செம்டெம்பர் மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையை ஒத்ததாக அமைந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்

Tuesday, 25 August 2015

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை, நேற்று செவ்வாய்க்கிழமை (25) பதவிப்பிரமாணம் செய்வதாக இருந்த போதிலும், தற்போது அது பிற்போடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, நாளை வியாழக்கிழமையும் (27) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையுமே (28) புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கத்துக்கான அமைச்சரவை விடயதானங்களை நியமிப்பது தொடர்பான பணிகள் தற்போது பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. இதற்கானப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்றன. இருப்பினும், அமைச்சரவைக்கான விடயதானங்கள் குறித்து தொடர்ந்தும் ஆழமாகச் சிந்தித்து திர்மானம் எடுக்க வேண்டி உள்ளதாகவும் இதனாலேயே அமைச்சரவைப் பதவிப்பிரமாணம் நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கு அநீதி வரும்போது தடுத்து நிறுத்துவேன் ---- த.கலையரசன்

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மாற்றுக் கட்சிக்கு சோரம் போகாது தமிழர்களின் உரிமை பயணத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றியடையச் செய்து எமது பலத்தை சர்வதேசத்துக்கு மீண்டுமொருமுறை நிரூபித்து காட்டியுள்ளனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் எனக்கெதிராக மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அம்பாறை மாவட்ட மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றியடைய செய்துள்ளதால் மாவட்டத்தில் இரண்டாவது நிலையில் தெரிவாகியுள்ளேன் என்றார். மேலும்,அம்பாறை மாவட்ட மக்களுடைய விடுதலைக்காக என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழர்களுக்கு அநீதி வரும்போது தடுத்து நிறுத்துவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மதுபோதையில் கைது

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுர்நகர் பிரதேசத்தில் மதுபோதையில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் 33 வயதுடைய ஒருவரை திங்கட்கிழமை (24) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சந்தேக நபர் மதுபோதையில் குழப்பம்  விளைவித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Monday, 24 August 2015

இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை

அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு 100 மெற்றிக்தொன் கரும்பு அறுவடை செய்ய முடியுமென கரும்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கரும்பு அறுவடையை மிக இலகுவாகவும் விரைவாகவும், அறுவடை செய்ய முடிவதாகவும் இதனால் தாங்கள் கூடுதலான இலாபத்தை பெறமுடியுமென கரும்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கரும்பு அறுவடைக்கு வேலையாட்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றதாகவும் கரும்பு உற்பத்தியாளர்கள் கூறினார்கள். இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்து வருவதையிட்டு கரும்பு உற்பத்தியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

Thanks கோடீஸ்வரன்

புதிய எம்.பி.க்களுக்கான கரும பீடம் நாடாளுமன்ற கட்டடடத் தொகுதியில்

நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் நலன் கருதி நாடாளுமன்ற கட்டடடத் தொகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கரும பீடம் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு திறந்திருக்கும். 8 ஆவது நாடாளுமன்றத்தில் முதலாவது அமர்வின் முதலாவது கூட்டத் தொடரை முன்னெடுப்பதற்கு தேவையான ஒழுங்குகளை தயார் செய்வதன் நிமித்தம் இந்த கரும பீடம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இன்றுக் காலை 9.30க்கு திறக்கப்பட்ட இந்த கரும பீடத்தில், எதிர்வரும் 3 நாட்களுக்கு காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 வரையான காலப்பகுதியில் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். 

குமார் சங்கக்கார ஓய்வுபெற்றார்..


 ALL PHOTOS
இலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித்தலைவருமான குமார் சங்கக்கார, சர்வதேசப் போட்டிகளிலிருந்து இன்றிலிருந்து உத்தியோகபூர்வமாக விடைபெற்றார். இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவிலேயே அவர் ஓய்வுபெற்றார்.

 சங்கக்கார விடைபெற்ற போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர், குமார் சங்கக்காரவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இதில் கலந்துகொண்டு, குமார் சங்கக்காரவைக் கௌரவித்தனர். இந்தக் கௌரவிப்பு நிகழ்வின்போது கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, குமார் சங்கக்காரவுக்கு கோரிக்கை விடுத்தார். தனது நன்றியறிதல் உரையில், தனது கிரிக்கெட் வாழ்வில் பங்களித்த அனைவருக்கும் நன்றி செலுத்திய குமார் சங்கக்கார, இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

அத்தோடு, அஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு அற்புதமானதொரு எதிர்காலம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Sunday, 23 August 2015

தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்

இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தனதாக்கிக்கொண்ட அகில இலங்கை தமிழ் அரசுக் கட்சி அந்த இரண்டு உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை), சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி) ஆகிய இருவருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

Thursday, 20 August 2015

ஆற்று மணல் அகழ்ந்த இருவர் கைது

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளக்காடு களியோடை ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை புதன்கிழமை (19) மாலை கைதுசெய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

 ஆற்று மணல் அகழ்ந்து உழவு இயந்திரங்களில்  ஏற்றிக்கொண்டிருந்த இந்த இருவரையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அக்கரைப்பற்று சாகாமம் விசேட அதிரடிப்படையினர் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனை அடுத்து  சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று இருவரை கைதுசெய்ததுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

Wednesday, 19 August 2015

புத்தர் பிள்ளையார் சிலைகளை அகற்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்;பட்ட வட்டிவெளி கிறவல் குழி பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்த புத்தர் பிள்ளையார் சிலைகளை அகற்ற முற்பட்ட ஒரு சாராரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்
(18) காலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது
இது தொடர்பில் தெரியவருவதாவது.இ குறித்த பிரதேசத்தில்  பல வருடங்களுக்கு முன் தனியார் ஒருவருக்கு செந்தமாகவிருந்த காணியினை குறித்த நபர் உகந்தை முருகன் ஆலயத்தின் பெயரில் எழுத்து முலமாக ஒப்படைத்திருந்தார் என பொதுமக்கள் தொpவித்தனா;.
நாளடைவில் இக் காணியினை அபகரிக்க ஒரு சாரார் தொடர்ச்சியாக முனைந்து வந்த நிலையில் உகந்தை முருகன் ஆலய வண்ணக்கர் தலைமையிலான நிருவாக சபையினர் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள சில ஆலயங்களுக்கும் விகாரைக்கும் எழுதி வைத்திருந்ததாக பொத்துவிலைச் சோ;ந்த நடராசா ஜெகன் எனும் பொதுமகன் ஒருவா; தொpவித்தாh;.
இந்; நிலையிலேயே நேற்று இரவூ விகாரைக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தில் பிள்ளையார் சிலையூம் புத்தர் சிலையூம் நிறுவப்பட்டிருந்தது. இதனை காலை வேளையில் கண்ணுற்ற சிலா;   சிலைகளை அகற்ற முற்பட்டனா;. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்கள் ஒன்று கூடிய வேளையில் தலையீடு செய்த இராணுவத்தினரும் பொலிசாரும்  சமசரம் செய்யூம் முயற்சியில் ஈடுபட்டனா;.


பின்னா; அங்கு சிலைகளை அகற்றுவதற்காக வருகைதந்தவா;கள் நீதி வேண்டி நீதிமன்றம் செல்லவூள்ளதாக குறிப்பிட்டு வெளியேறியூள்ளனா;.  
இதற்கிடையே நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவூம் பொத்துவிலை சேர்ந்த பொதுமக்கள் தொpவிக்கின்றனா;.

பொத்துவில் பிரதேசத்தில் மோட்டார் குண்டு மீட்பு


அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டைப் பிரதேசத்தில் பழைய மோட்டார் குண்டொன்றை மீட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொத்துவில் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (20) தெரிவித்தனர். கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் ரொட்டைப் பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசன திணைக்களத்துக்குச்  சொந்தமான காணியில் விசேட அதிரடிப்படையினரின் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாம் அகற்றப்பட்டதை அடுத்து இந்தக் காணி நீர்ப்;பாசன திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தக் காணியை நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் புதன்கிழமை (19) மாலை துப்பரவு செய்து எல்லை இடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,  இந்த மோட்டார் குண்டு காணப்பட்டது. இது தொடர்பில் பொத்துவில் பொலிஸாருக்கு நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தகவல் வழங்கியதை தொடர்ந்து, அங்கு விரைந்த பொலிஸாரும் பொத்துவில் அறுகம்பை விசேட அதிரடிப்படையினரும் மோட்டார் குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்

கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் எமது அலசல்


கிழக்கு மாகாணத்திலிருந்து இந்தமுறை ஆறு  புதுமுகங்கள் தெரிவாகியுள்ள அதேவேளை, முன்னாள்   நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தோல்வி அடைந்துள்ளனர்.   இந்த மாகாணத்திலிருந்து தெரிவான 16  உறுப்பினர்களில் ஏழு முஸ்லிம்களுடன் ஐந்து தமிழர்களும் நான்கு சிங்களவர்களும் அடங்குகின்றனர். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக ஐந்து தமிழர்கள் தெரிவாகியிருந்தமை போன்று இந்தமுறையும்  தெரிவாகியுள்ளனர்.

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  போட்டியிட்டு நான்கு உறுப்பினர்களை பெற்றிருந்தது. இந்தமுறையும் அதே எண்ணிக்கையே பெற்றுள்ளது. தேர்தலில் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பழைய முகம்;களில் சில தோல்வி அடைந்துள்ள அதேவேளை, அந்த இடத்தை  புதுமுகங்கள் தக்கவைத்துக்கொண்டுள்ளன. திருகோணமலை மாவட்டம் இம்றான் மஹ்றூப் (ஐ.தே.க),  ஏ.எம்.மஹ்றூப் (ஐ.தே.க), இரா.சம்பந்தன் (த.தே.கூ), சுசந்த புஞ்சிநிலமே (ஐ.ம.சு.மு) குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இரா.சம்பந்தன், சுசந்த புஞ்சிநிலமே ஆகியோர் 2010 இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தெரிவாகியிருந்தனர். ஏ.எம்.மஹ்றூப் (ஐ.தே.க) 2010 க்கு முன்னைய காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ள அதேவேளை, இம்றான் மஹ்றூப் புதுமுகமாக தெரிவாகியுள்ளார்;. மட்டக்களப்பு மாவட்டம் என்.ஸ்ரீநேசன் (த.தே.கூ), எஸ்.வியாளேந்திரன் (த.தே.கூ), எஸ்.யோகேஸ்வரன் (த.தே.கூ), எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  (ஐ.தே.க),  அலிஸாஹிர் மௌலானா (ஸ்ரீ.ல.மு.கா)  இவர்களில் என்.ஸ்ரீநேசன், எஸ்.வியாளேந்திரன் இருவரும் நாடாளுமன்றத்துக்கு புதுமுகங்களாக  பிரவேசிக்கின்றார்கள்.  


 அலிஸாஹிர் மௌலான 2005; க்கு முன்னதாகவும் 2010 இல் எஸ்.யோகேஸ்வரனும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்கள். அம்பாறை மாவட்டம் தயா கமகே (ஐ.தே.க), பைஷல் காசிம் (ஐ.தே.க), எச்.எம்.ஹாரீஸ் (ஐ.தே.க),  எம்.மன்சூர் (ஐ.தே.க), சிறியாணி விஜேவிக்கிரம (ஐ.ம.சு.மு), விமலவீர திஸநாயக்க (ஐ.ம.சு.மு),  ரொபின் கோடிஸ்வரன் (த.தே.கூ) இவர்களில் பைஷல் காசிம், எச்.எம்.ஹாரிஸ், சிறியாணி விஜேவிக்கிரம, 2010 நாடாளுமன்றத் தேர்தலிலும் விமலவீர திஸநாயக்க 2005 தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக  தெரிவாகியிருந்தனர். ஏனைய   மூவரும்  புதுமுகங்கள் வரிசையில்  இடம் பிடித்திருக்கின்றார்கள். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவாகியிருந்த 14  பேரில் 12 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டபோதிலும்,  ஏழு  பேர் இம்முறை தெரிவாகும் வாய்ப்பை இழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பி;.செல்வராசா (த.தே.கூ), பா.அரியநேத்திரன் (த.தே.கூ), எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (ஐ.ம.சு.மு) அம்பாறை மாவட்டத்தில் ஏ.ஏல்.அதாவுல்லா (ஐ.ம.சு.மு), பி.பியசேன (ஐ.ம.சு.மு), சரத் வீரசேகர (ஐ.ம.சு.மு), பி;.தயாரட்ன (ஐ.தே.க) 1977 தொடக்கம் நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிட்டு வந்த இவர் இம்முறைதான் தோல்வியை தழுவியுள்ளார்.

 திருகோணமலை மாவட்டத்தில் எம்.எஸ்.தௌபீக் (ஸ்ரீ.ல. மு.கா) ஆகியோர் தோல்வி அடைந்த முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர். அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவான  பைஷல் காசிம்,  எச்.எம்.ஹரீஸ் மற்றும் எம்.மன்சூர் ஆகிய மூவரும்  ஸ்ரீ.ல.மு.கா சார்பாகவும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவான  ஏ.எம்.மஹ்றூப் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் ஐ.தே.க. வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது

'எனது வெற்றி தனிப்பட்ட வெற்றி அல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி..கோடீஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்களின் நலனுக்காக தான் பாடுபடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு  விருப்பு வாக்குகளுடன் தெரிவுசெய்யப்பட்ட  அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.
அக்கரைப்பற்றிலுள்ள அவரது இல்லத்தில்  புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'எனது வெற்றி தனிப்பட்ட வெற்றி அல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெற்றி என்பதுடன், எனது சக வேட்பாளர்களினதும் கூட்டு வெற்றி ஆகும்.
வாக்களித்த மக்களுக்கும் அதேபோல் எனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.'  என்றார்.
'மேலும், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு சிறந்த உண்மையான, நேர்மையான தலைமைத்துவத்தை வழங்குவேன்.  இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களையும் அரவணைத்து பக்கச்சார்பின்றி செயலாற்றுவேன். அம்பாறை மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தியை  பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன்' எனவும் அவர் தெரிவித்தார்.

பராளுமன்ற பொதுத்தேர்தலில்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் வெற்றி

நடை பெற்று முடிவடைந்த   பராளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற திகாமடுல்ல மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதேச மக்களால் மாலை அணிவித்து வரவேற்க்கப்படுவதனை காணலாம்

சகோதர இணையத்தள இஸ்தாபகர் அவர்களது தயார் காலமானார்

சகோதர இணையத்தள இஸ்தாபகர் டினேஷ்  அவர்களது தயார் காலமானார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19)ஆலையடிவேம்பு வீதியில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்று மாலை 04.00மணிக்கு அக்கரைப்பற்று இந்து மயானத்திற்கு  நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பம்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைநெறிகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை மீள ஆரம்பமாகவுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார். விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் புதன்கிழமை  மாலை ஐந்து மணிக்கு முன்பாக அவர்களுக்குரிய விடுதிகளுக்கு சமூகம் அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இஸ்லாமிய கற்கைநெறிகள் மற்றும் அரபுபீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் கடந்த நான்காம் திகதி  சிறு கைகலப்பு ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மறு அறிவித்தல்வரை  இந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. எனவே, இந்த மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tuesday, 18 August 2015

ஒரு வாரத்துக்கு தடை

தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இந்த ஒரு வார காலத்துக்குள் எந்தவொரு ஊர்வலத்தையும் நடத்த அனுமதி கிடையாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் ஊர்வலங்கள் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

Monday, 17 August 2015

நாடாளுமன்றத் தேர்தல் - 2015 LIVE



மஹநுவர - நாவலபிட்டிFull Resultமஹநுவர - ஹரிஸ்பத்துவFull Resultமஹநுவர - கலகெதரFull Resultகம்பஹா - இறுதி முடிவுFull Resultகொழும்பு - கெஸ்பேவFull Resultநுவரெலியா - இறுதி முடிவுFull Resultகொழும்பு - கொலன்னாவைFull Resultகொழும்பு - ஹோமாகமFull Resultகேகாலை - இறுதி முடிவுFull Resultகுருணாகல் - இறுதி முடிவுFull Resultவன்னி - இறுதி முடிவுFull Resultகம்பஹா - பியகமFull Resultகம்பஹா - வத்தளைFull Resultகொழும்பு - மஹரகமFull Resultகொழும்பு - கொழும்பு மேற்குFull Resultகொழும்பு - ரத்மலானை

முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 9.30 மணியளவில்

8ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதுடன் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 9.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி செய்வதாக  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
4.00 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாலை 4.30 மணியளவில் தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 61 வீதமான வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் மாலை 04 மணிவரை 60 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக வாக்களிப்பு நிலையங்களுக்கு தலைமை தாங்கிய சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் நேர காலத்துடன் சென்று தமது வாக்குகளை அளித்தனர். வாக்களிப்பு சுமூகமாகவும் அமைதியாகவும் இடம்பெற்றது. நண்பகல் 12 மணிக்கு முன்னர் மந்தகதியில் வாக்களிப்பு இடம்பெற்றிருந்த போதிலும், பிற்பகல் வேளையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனை பொத்துவீல் சம்மாந்துறை தேர்தல் தொகுதிகளில் 61விகிதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக பவ்ரல் தேர்தல் கண்காணிப்பின் மாவட்ட அதிகாரி கே.சத்தியனாதன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் மூன்று பேர் கைது.

  போலியான வாக்குச்சீட்டுக்கள், தேர்தல் சுவரொட்டிகள், வேட்பாளர் விளம்பர அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தேர்தல் தினமான இன்று திங்கட்கிழமை அதிகாலை கல்முனையில் மூன்று பேரை கைதுசெய்ததாக  கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் சட்டங்களை மீறி இவர்கள் மோசடியான வாக்குச் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என்று பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தேர்தல் கண்காணிப்பு விசேட ரோந்துப் பொலிஸார் 54, 49, 32 வயதுகளையுடைய இவர்களை கைதுசெய்தனர். இந்த சந்தேக நபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி உட்பட 327 போலி வாக்குச்சீட்டுக்கள், 890 வேட்பாளர் விளம்பர அட்;டைகள், ஏழு பெரிய மற்றும் சிறிய சுவரொட்டிகள் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். இந்தச் சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sunday, 16 August 2015

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 465,757 பேர் வாக்களிக்கத் தகுதி

 
 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 465,757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்மாவட்டத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலிண விக்கிரமரத்ன தெரிவித்தார்.
அம்பாறை தேர்தல் தொகுதியில் 161,999 பேரும்
 சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 80,357 பேரும்
 கல்முனை தேர்தல் தொகுதியில் 71,254 பேரும், 
பொத்துவில் தேர்தல் தொகுதியில் 152,147 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்களாக 
அம்பாறைத் தொகுதியில் 160 நிலையங்களும் 
பொத்துவில் தொகுதியில் 151 நிலையங்களும்
 சம்மாந்துறை தொகுதியில் 87 நிலையஙகளும்
, கல்முனைத் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களுமாக
 மொத்தம் 464 நிலையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது வாக்குப் பெட்டிகள் உரிய நிலையஙகளுக்கு கொண்டு செல்லும்    நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும்  மாவட்டத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலரும் உதவி தேர்தல்கள் ஆணையாளருமான திலிண விக்கிரமரத்ன தெரிவித்தார்.

பஸ் மிதிபலகையில் நின்று பயணித்துக்கொண்டிருந்தவர் விழுந்து காயம

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டைப் பிரதேசத்தில் 16- ஞாயிற்றுக்கிழமை பஸ் மிதிபலகையில் நின்று பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் தவறி விழுந்து  காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  
திருக்கோவிலைச் சேர்ந்த எஸ்.சிவதாசன் (வயது 34) என்பவரே காயமடைந்துள்ளார்.
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் மேற்படி நபர் பயணித்துக்கொண்டிருந்தபோதே, இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.
காயமடைந்த நபர் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.   
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மாயம்...

இந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா நியூகினியா அருகே தனது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்று விட்டார்களா, அல்லது விமானம் மாயமாகி விட்டதா, என சந்தேகம் நிலவுவதாக அவ்வூடகங்கள் தெரிவிக்கின்றன

Friday, 14 August 2015

விபத்தில் படுகாயம்


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று- கல்முனை  பிரதான வீதியில் இன்று (14) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர படுகாயமடைந்த ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்



பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் சட்ட விதிகளை மீறியோர் கைது

பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் தேர்தல் துண்டுப்  பிரசுரங்களை வாகனத்தில் கொண்டு சென்றமை மற்றும்  தேர்தல் பிரசுரங்களை விநியோகித்த இருவரை  இன்று (14) அதிகாலை 2.30 மணிக்கு பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  வேட்பாளர் ஒருவரின் இலக்கம் மற்றும் புகைப்படம் பொறிக்கப்பட்ட 65 சிறிய அட்டைகள், 550 மாதிரி வாக்குச் சீட்டுகள் மற்றும் வாகனம் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன

Thursday, 13 August 2015

சமஷ்டி ஆட்சி முறை-- சி.ஜெகநாதன்

அவுஸ்திரேலியாவில் சமஷ்டி ஆட்சி பின்பற்றப்படும்போது இரு மொழிபேசும் இலங்கையில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சமஷ்டி அரசே எங்களது தீர்வு என எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறப்பட்டதன் பின்னர் தென்பகுதியில் இனவாத குழுக்கள் இவ்விஞ்ஞாபனத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளன. அப்படி என்றால் 60வருடங்களாக உரத்த குரலில் நாம் கூறி வந்த விடயத்தை அவர்கள் அறிந்தும் அறியாதது போல் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  எனவே, அறியாமல் மாற்றுக் கட்சிகளிடம் சோரம் போயுள்ள எமது சமூகத்திலுள்ளோர் இதனை உணர்ந்து மீண்டும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார். 

Tuesday, 11 August 2015

போதைப்பொருள் தடுப்பு



இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 8 வரை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த தேசிய போதைப்பொருள் தடுப்பு மாதத்தினையொட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் மகாராஜா (MTV) ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வூட்டலை நோக்காகக்கொண்ட இல்லத் தரிசிப்புகள் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள நாவற்காடு கிராமத்தில் நேற்று (9) காலை இடம்பெற்றன.

சக்தி தொலைக்காட்சி செய்திப்பிரிவின் தொகுப்பாளர் நாகலிங்கம் ஜெகநாத் கண்ணா தலைமையில் நியூஸ் பெஸ்ற் (News 1st) செய்திப்பிரிவினரும், தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆலோசகர் ஏ.காலித் மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர் அசார் அஹமட் ஆகியோருடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், கிராம உத்தியோகத்தர்களான ஏ.சுபராஜ் மற்றும் கே.பிரதீபா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.சமனந்தகுமார, எஸ்.பார்த்திபன், திருமதி. ஜெயர்ஜினி பார்த்தீபன், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரி.அழகரெத்தினம், எஸ்.கற்பகம், ஏ.டபிள்யூ.கணேசமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினராக நாவற்காடு கிராமத்திலுள்ள பொதுமக்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து குடும்பத் தலைவர்களின் மது, சிகரட் உள்ளிட்ட போதை தரக்கூடியதும், உடற்சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடியதும், புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளை உண்டாக்கக்கூடியதுமான பொருட்களை நுகர்வதிலிருந்து தவிர்த்துக்கொள்ளல் தொடர்பாகக் குடும்ப அங்கத்தவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகா கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற சமய அனுஸ்டானங்களோடு ஆரம்பமான இந்நிகழ்வில் குறிப்பிடத்தக்க விடயமாக, கல்வி கற்கும் இளைஞர்கள் தாம் வாழ்கின்ற சமுகத்தில் பல்வேறு வழிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதன்மூலம் அவர்களது எதிர்கால வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக அறிவுத்தல்கள் குறித்த குழுவினரால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின்போது நாவற்காடு கிராமத்தில் சுமார் 100 இல்லத் தரிசிப்புக்கள் இடம்பெற்றதுடன், எமது நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதியின் குறித்த சமுக மேம்பாட்டு வேலைத்திட்டத்தில் எவ்வித வர்த்தக நோக்குமில்லாது தம்மையும் இணைத்துக்கொண்டு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இவ்விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்த மகாராஜா (MTV) ஊடக வலையமைப்பிற்குத் தமது பிரதேச மக்கள் சார்பில் பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.




விபத்தில், சிறுவன் படுகாயம;

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று (11) மாலை 6.20 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்,  படுகாயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர். கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவனை மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பாக அக்கரைப்ற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை பெயர் பலகை

அம்பாறை மாவட்ட கல்முனை தமிழர் பிரதேசத்தில் வீதி ஒன்றிற்கு இரவோடு இரவாக சட்டத்திற்கு புறம்பான வகையில் எம். எஸ் . காரியப்பர் வீதி என பெயர் இடப்பட்டு அங்கு எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் அனைத்தும் கல்முனை தமிழ் மக்களாலும் , தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களினாலும் தடுக்கப்பட்டு அப்பெயர் பலகை அங்கிருந்து அகற்றப்பட்டது.

விபத்தில் நபர் உயிரிழப்பு


திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பொத்துவீல் வீதி  காஞ்சிரம்குடா சந்திப்பகுதியில் நேற்று  திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள்  விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான  நிலையில் அம்மாறை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர்  உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கிராம சேவையாளராக கடமையாற்றும் 42 வயதுடைய ப.பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார். எதிர்பாராத விதமாக வீதியில் குறுக்கிட்ட  மாடு ஒன்றில் மோதியதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரனையிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த நபர், திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்