Friday, 8 May 2015

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது

 teem

கழிவுகள் சேகரிக்கும் உழவு இயந்திரத்தினை முந்திச் செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.
அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியின் தீவுக்காலை பிரதேசத்திலேயே இச்சம்பவம் இன்று(08) காலை 10மணியளவில் நடைபெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி கம்பி வேலியுனுள் பாய்ந்து சேதத்துக்குள்ளானதுடன் சாரதி காயங்களுடன் பனங்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து சாகாமம் வீதியினூடாக பயணித்த முச்சக்கரவண்டி வண்டி அவ்வழியாக பயணித்த பிரதேசசபை கழிவுகள் சேகரிக்கும் உழவு இயந்திரத்தினை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.
இதன்போதே வீதியில் இருந்த பள்ளத்தினூடாக பாய்ந்த முச்சக்கரவண்டி அதிஸ்டவசமாக நேராக மின்சார தூணில் மோதாது அருகில் இருந்த வேலியினுள் பாய்ந்துள்ளது.
விபத்து நடைபெற்றபோது பின்னிருக்கையில் ஒருவர் இருந்துள்ளபோதிலும் அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் ஆரம்பித்துள்ளர்

No comments: