அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தம்பட்டை பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் பலியாகியுள்ளதாக, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பனங்காட்டைச் சேர்ந்த 35 வயதுடைய விநாயகமூர்த்தி விஜயகுமார் என்பவரே பலியாகியுள்ளார்.
தம்பட்டை பகுதியிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அருகில் சென்ற துவிச்சக்கரவண்டியுடன் மோதிக் கொண்டதினாலேயே, இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில், மூவர் படுகாயமடைந்த நிலையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும் இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment