வி.சுகிர்தகுமார்
அம்பாறை. அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிக்கம்பை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் ஐந்து பேர் திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸாரும் இலங்கை மின்சாரசபையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது,
அலிக்கம்பை பிரதேசத்தை சேர்ந்த மூவரும் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment