பொத்துவில் நிப்றாஸ்-
"வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும்" , "ஏழை மாணவர்களின் கல்வியை சுரண்டாதீர்கள்" போன்ற கோசங்களை எழுப்பியும் தங்களது போராட்டங்களை நடத்தினர்.
இப்போராட்டம் பொத்துவில் பெரிய பள்ளிக்கு முன்பாக ஜும்மா தொழுகையின் பின்னர் இடம்பெற்றது . இதில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் இளைஜர்கள் பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர் .
பொத்துவிலில் கடந்த காலமாக ஏற்பட்டிருக்கும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (2015-05-08) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ”நாம் பொத்துவில்” எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
"வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும்" , "ஏழை மாணவர்களின் கல்வியை சுரண்டாதீர்கள்" போன்ற கோசங்களை எழுப்பியும் தங்களது போராட்டங்களை நடத்தினர்.
இப்போராட்டம் பொத்துவில் பெரிய பள்ளிக்கு முன்பாக ஜும்மா தொழுகையின் பின்னர் இடம்பெற்றது . இதில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் இளைஜர்கள் பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர் .
அமைச்சர்களே பாராளுமன்ற உறுப்பினர்களே மாகாண சபை முதல்வரே மாகாண சபை அமைச்சர்களே உறுப்பினர்களே கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் “ “கல்வி அமைச்சரே எமது ஏழை மாணவர்களுக்கு கருணை காட்டுங்கள் இலவச கல்வியை எங்களுக்கும் தாருமையா “ “பொத்துவில் மாணவர்களின் எதிர்காலம் எங்கே செல்கின்றது ?” “தந்துவிடு தந்துவிடு எமது ஆசிரியர்களை தந்துவிடு , வேண்டாம் வேண்டாம் எமது ஊருக்கு துரோகம் வேண்டாம் “ “உபவலைய கல்வி பணிப்பாளரே இன்னும் ஏன் அக்கரைப்பற்றில் மண்டியிடுகிண்றீர்கள் ? எமது ஊர் மாணவர்களிட்கு அநியாயம் செய்யாதீர் “ “அதிகாரிகளே ஆசிரியரை தந்துவிடு ,அரசியல்வாதிகளே கல்வியிலும் அரசியலா ? வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும்” போன்ற சுலோகங்களை ஏந்தியும்,
, “எமது போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட நாம் தயார் “ என நாம் பொத்துவில் அமைப்பினரும் பொதுமக்களும் ஆவேசமாக கூறினார்கள் .
மற்றும் அரசியல்வாதிகளிடமும் கல்வி அதிகாரிகளிடமும் எமக்கு தீர்வு கிடைக்குமா எனவும் கேள்வி எழுப்பினர்
No comments:
Post a Comment