Wednesday, 27 May 2015

மாணவிக்காக அம்பாறையில் கடையடைப்பு

மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடையடைப்புக்கள் நடைபெற்ற போதிலும், வாகனப்போக்குவரத்துக்கள், அரச அலுவலக நடவடிக்கைகள், பாடசாலைகள் போன்றன வழமை போன்று செயற்பட்டன.

 
இன்றைய தினம் பாரிய அளவில் ஹர்த்தால் நடைபெறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டபோதும் இறுதியில் அந்நடவடிக்கை பூரணமாக கடைப்பிடிக்கப்படவில்லை.

இதேவேளை கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட வித்தியாவின் கொலை தொடர்பில் நியாயம் கோரிய அமைதிப் பேரணி பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி சாகாம வீதியூடாக சந்தை சதுக்கத்தை அடைந்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.

நேற்றைய தினம் வழங்கப்பட்ட துண்டுபிரசுரத்தின் மூலம் ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments: