Tuesday, 19 May 2015

துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வு

பிரேம்....

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரையப்பா நவரெட்ணராஜாவின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (18) மாலை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச மாணவ, மாணவிகள் 20 பேர் இலவச துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்ட இந்நிகழ்வில், வறிய மாணவர்களின் அவசியத்தேவை கருதி அவற்றை வழங்குவதற்கு முன்வந்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கு நன்றி தெரிவித்த பிரதேச செயலாளர், துவிச்சக்கரவண்டிகளை குறித்த மாணவர்கள் பெற்றுக்கொள்வதில் கரிசனையோடு செயற்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதன்போது 12 மாணவிகளுக்கும், 8 மாணவர்களுக்கும் ஒவ்வொன்றும் ரூபாய். 12,500.00 பெறுமதியான துவிச்சக்கரவண்டிகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வில் பிரதேச செயலகக் கணக்காளர் கே.கேசகன், அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் எஸ்.எல்.எம்.அன்வர், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.சி.எம்.ரகீப், சமுக சேவைகள் உத்தியோகத்தர் பொன்.சுந்தரராஜன், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிஷந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ரஞ்சன் மற்றும் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய அதிபர் கே.தட்சணாமூர்த்தி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

No comments: