Wednesday, 6 May 2015

சுயதொழில் மானிய உதவிக் கொடுப்பனவு வழங்கல்,

பிரேம்...

கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வருமானம் குறைந்தோர் மற்றும் விதவைகளுக்கான சுயதொழில் மானிய உதவிக் கொடுப்பனவு வழங்கல், தேசிய முதியோர் செயலகத்தினால் கண்பார்வை குறைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியவருக்கு இலவச கண் வில்லைகள் வழங்கல் மற்றும் அங்கவீனர்களுக்குச் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வுகள் என்பன நேற்றும் (28-04-2015) இன்றும் (29-04-2015) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் வழங்கிவைக்கப்பட்ட குறித்த இலவச உதவிகளில் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த எண்மர் சுயதொழில் மானிய உதவிக் கொடுப்பனவுக்கான காசோலைகளையும், இருவர் சக்கர நாற்காலிகளையும், ஒருவர் கண் வில்லைகளையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கெடுத்திருந்தனர்.

No comments: