Tuesday, 26 May 2015

கல்வியின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வு இன்றைய பெண்களிடம் அதிகமாக காணப்படுகின்றமை வரவேற்கத்தக்கது


வி.சுகிர்தகுமார்


கல்வியின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வு இன்றைய பெண்களிடம் அதிகமாக காணப்படுகின்றமை வரவேற்கத்தக்கது. அக்கல்வியை கற்பதற்காக அவர்கள் காட்டும் அக்கறை, ஆர்வம் அதனிலும் சிறப்பானது என ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி சித்ரா தேவராஜன் தெரிவித்தார்.
நேற்று(24)அக்கரைப்பற்று எல்சி பெண்கள் கல்லூhயில் இடம்பெற்ற சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று பல பெண்கள் சமூகத்தின் முன்னோடிகளாக, சமூகத்தின் நலனில் அக்கறையுடையவர்களாக திகழ்கின்றனர். சுயமாக சிந்தித்து செயலாற்றும் தனித்துவம் மிக்கவர்களாகவும் மாற்றம் அடைந்துள்ளனர் என்றார்.
பாடசாலை கல்வியுடன் தங்களை நிறுத்திவிடாது பெண்கள் இவ்வாறான பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்வதன் ஊடாக தங்களது வாழ்வை வளப்படுத்தி கொள்ளலாம் என்பதற்கு இதுவும் தக்கசான்று எனவும் குறிப்பிட்டார்.
மேலும் எல்சி பெண்கள் கல்லூரியில் கற்பிக்கப்படும் ஆங்கில கல்வி, அழகுக்கலை பயிற்சி ,தகவல் தொழில்நுட்பவியல் நெறிகளில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுக்கொள்ளுகின்ற இரு சமூகங்களையும் சார்ந்த மாணவிகளை பாராட்டுவதுடன் இக்கல்லூரி ஆற்றி வரும் பணிகளையும் பாராட்டினார்.
நிருவாக உத்தியோகத்தர் நியோமி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பல்வைத்தியர் திருசாந்தி கிரிதரன், மகாசக்தி தலைவி துளசிமணி மனோகரன் எல்சி பெண்கள் கல்லூரி பணிப்பாளர் கே.எல்.எம்.ஜசால் முகமட், எல்பிஏ கம்பஸ் பணிப்பாளர் ஏ.ஜி.எம் சாமில் , உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி நெறிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழையும், நினைவுச்சின்னத்தினையும் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில்  எல்சி பெண்கள் கல்லூரி பணிப்பாளர் கே.எல்.எம். ஜசால் முகமட் ஆற்றிவரும் சேவையை பாராட்டி கல்லூரி சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டா

No comments: