Sunday, 24 May 2015

பொத்துவில் ஊரணி காட்டுப் பகுதியில் இடம்பெற்ற பஸ், மோட்டார் சைக்கிள் விபத்தில்

அம்பாறை மாவட்டம், பொத்துவில் ஊரணி காட்டுப் பகுதியில் இடம்பெற்ற பஸ், மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலே பலியான பரிதாபகரமான சம்பவம் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

 பொத்துவிலில் இருந்து கோமாரி நோக்கிச் சென்றவேளை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 கோமாரி – 01ஐச் சேர்ந்த சூரியதாசன் சுஜிஸ்தன் (வயது 19), அதே இடத்தைச் சேர்ந்த ஜோகராஜா கிருபாகரன் (வயது 18) ஆகிய இரு இளைஞர்களுமே இவ்விபத்தில் பலியாகியுள்ளனர்.
குறித்த பஸ் வண்டியின் சாரதி பொத்துவில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதுடன், உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: