Wednesday, 6 May 2015

திறந்த கலந்துரையாடல்

பிறேம் ...

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் தொழிற்படும் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவரும் நலனுதவி (சமுர்த்தி முத்திரைக் கொடுப்பனவு) திட்டத்தினை மறுசீரமைப்பதற்கான திறந்த கலந்துரையாடலொன்று நேற்று, 28-04-2015 செவ்வாய்க்கிழமை பி.ப. 3.30 மணிக்கு ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் இடம்பெற்றது.





ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் ஆலையடிவேம்பு கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த பயனாளிகளுக்காக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா, மகா சங்கங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சசீந்திரன், கிராம உத்தியோகத்தர் பி.திருநாவுக்கரசு, ஆலையடிவேம்பு வடக்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் உதவி முகாமையாளர் கே.கணேசமூர்த்தி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜெயர்ஜினி, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கற்பகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



இக்கலந்துரையாடலில் இவ்வருட முத்திரைக் கொடுப்பனவுகளுக்காகப் புதிதாக விண்ணப்பித்துள்ள குடும்பங்களுக்கு அவற்றைப் பகிர்ந்தளித்தல் தொடர்பாகவும், குடும்பங்களின் பொருளாதாரத் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படும் முத்திரைகளின் பெறுமதிகளைத் தீர்மானித்தல் சம்மந்தமாகவும் உத்தியோகத்தர்களும் பயனாளிகளும் கலந்துரையாடியிருந்தனர்.

No comments: