Wednesday, 13 May 2015

திருக்கோவில் பிரதேச சபையின் புதிய கட்டடம் மற்றும் சந்தைக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா

திருக்கோவில் பிரதேச சபையின் புதிய கட்டடம் மற்றும் சந்தைக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா  14) நடைபெறவுள்ளது.

பிரதேச தவிசாளர் வி.புவிதராஜன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளருமான பி.தயாரெட்ண, 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.யோகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு  புதிதாக அமைக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைக்கவுள்ளனர்.


இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன், எம்.இராஜேஸ்வரன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர்.

33மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இக்கட்டடமானது பிரதேச சபையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: