அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
சூதாடுவதாக தங்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சந்தேக நபர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சந்தேக நபர்களிடமிருந்து காட்ஸ் பக்கெட் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment