Friday, 29 May 2015

விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள், பதிவுச்சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்

பிரேம் ....



கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேவையுடையோருக்கான இலவச உபகரணங்கள் வழங்கும் வைபவம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேவைகளை வழங்குகின்ற முதியோர் சங்கங்களுக்கான பதிவுச்சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் என்பன இன்று28-05-2015 வியாழக்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச சமுகப் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.சி.எம்.ரகீப் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபங்களுக்குப் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்துகொண்டு விசேட தேவையுடையோருக்கான இலவச சக்கர நாற்காலிகளையும், ஊன்றுகோல்களையும், மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கிவைத்தார். தொடர்ந்து இடம்பெற்ற முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேவைகளை வழங்குவதற்கு அங்கீகாரமளிக்கப்பட்ட முதியோர் சங்கங்களுக்கான பதிவுச்சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் 9 கிராமசேவகர் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களின் தலைவர்கள் தமது முதியோர் சங்கங்களுக்கான பதிவுச்சான்றிதழ்களைப் பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் குறித்த சங்கங்கள் தமது செயற்பாடுகளில் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகள் தொடர்பாகக் கேட்டறிந்த பிரதேச செயலாளர், முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவு உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் அவற்றைத் தீர்த்துவைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, சமுர்த்தி மகா சங்கங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், சமுக சேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.சண்முகநாதன், ஆர்.சிவானந்தம் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் யு.எல்.உவைஸ் அகமட் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து அக்கரைப்பற்று சக்தி மகளிர் சங்கம் கண்டன ஊர்வலத்தில்

மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து அக்கரைப்பற்று   சக்தி  மகளிர் சங்கம்  இன்று வெள்ளிக்கிழமை   காலை 08.30 மணிக்கு அக்கரைப்பற்று ஸ்ரீ  வம்மியடி பிள்ளையார் ஆலய முன்றலில் இருவது ஆரம்பமாகி  பிரதான வீதிகள் ஊடாக  அமைதியான  முறையில்  தமது கண்டன சுலோகம்களை ஏந்தியவாறு கண்டன ஊர்வலத்தில் இடுபட்டிருந்தனர்  இவர்கள் தமது கண்டன சுலோகம்களில் 

"பாலியல் வன்முறை ஒழிக "
"பெண்கள் நாட்டின் கண்கள் "
":சட்டத்தரணிகளே வாதிடாதே "
"நீதி மன்றம் குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழக்குமா" 
"பென்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிப்போம் "
"சட்டக்களின் ஓட்டைகளை பயன்படுத்தி உற்றவாளிகளை தப்பிக்க விடாதீர்கள் "

போன்ற வாசகம்களை ஏந்தியவாறு கண்டன ஊர்வலத்தில் இடுபட்டிருந்தனர் 

மாணவி வித்தியாவின் படுகொலையினைக் கண்டித்து அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய மாணவர்களினது கவன இர்ப்புப் போராட்டம்

மாணவி வித்தியாவின் படுகொலையினைக் கண்டித்து அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய மாணவர்களினது 
கவன இர்ப்புப் போராட்டம் இன்று (28) வியாழக்கிழமை மதியம் 01.45 மணிக்குக்கு பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி அக்கரைப்பற்று - பொத்துவீல், சாகாமம் பிரதான  வீதியூடாக இடம் பெற்று மிண்டும் பாடசலையினை வந்தடைந்தது

நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.மதிதயன் சுட்டுகொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் ஆர்ப்பட்டமொன்று நேற்று வியாழக்கிழமை(29) முன்னெடுக்கப்பட்டது. சமூக சேவை திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர்கள் அக்கறைப்பற்றில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்துக்கு முன்னால் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். 'கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து' என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில்,  அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் சமூகசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Thursday, 28 May 2015

யானைக்குட்டி உயிரிழப்பு

அம்பாறை,  கஞ்சிகுடியாறு கிராம அலுவலர் பிரிவிலுள்ள  தாமரைக்குளம் கருணகல்லாறு பிள்ளையார் கோவிலுக்கு  அருகில் மூன்று வயதுடைய பெண் யானைக்குட்டியொன்று நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளது. பொறிவெடி வெடித்ததன் காரணமாக இந்த யானைக்குட்டியின் வாயில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், உணவு உட்கொள்ளவோ, நீர் அருந்தவோ முடியாதவாறு இந்த யானை உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இந்த நிலையிலேயே  யானைக்குட்டி உயிரிழந்துள்ளதாக தம்பிலுவில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி ஏ.ஏ.ஹலீம் தெரிவித்தார். திருக்கோவில் பிரதேசத்தில் மர்மமான முறையில் யானைகள் மரணமடைவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறு   மிருகவதை மேற்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு பொலிஸாரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருடம் திருக்கோவில் பிரதேசத்தில் மட்டும் 06 காட்டு யானைகள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும் அவர்  கூறினார். 

Wednesday, 27 May 2015

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்ட நால்வருக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், நேற்று செவ்வாய்க்கிழமை (26) தீர்ப்பளித்தார்.   

சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்

பொத்துவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள திவிநெகும பெறும் குடும்பங்களில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு திவிநெகும சமூக பாதுகாப்பு நிதியத்தினால் சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் திங்கட்கிழமை (25) பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு சிப்தொர புலமைப் பரிசில் நிதி வழங்கி வைக்கப்பட்டது. பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயாலாளர் என்.எம்.எம்.முஸர்ரத், பொத்துவில் உப வலய கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.அப்துல் அஸீஸ், திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் உதவி முகாமையாளர் ஏ.எல்.றபீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாணவிக்காக அம்பாறையில் கடையடைப்பு

மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடையடைப்புக்கள் நடைபெற்ற போதிலும், வாகனப்போக்குவரத்துக்கள், அரச அலுவலக நடவடிக்கைகள், பாடசாலைகள் போன்றன வழமை போன்று செயற்பட்டன.

 
இன்றைய தினம் பாரிய அளவில் ஹர்த்தால் நடைபெறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டபோதும் இறுதியில் அந்நடவடிக்கை பூரணமாக கடைப்பிடிக்கப்படவில்லை.

இதேவேளை கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட வித்தியாவின் கொலை தொடர்பில் நியாயம் கோரிய அமைதிப் பேரணி பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி சாகாம வீதியூடாக சந்தை சதுக்கத்தை அடைந்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.

நேற்றைய தினம் வழங்கப்பட்ட துண்டுபிரசுரத்தின் மூலம் ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து கோளாவில் விநாயகர் வித்தியாலய மாணவர்கள் கண்டன ஊர்வலத்தில்



மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து அக்கரைப்பற்று  கோளாவில் விநாயகர் வித்தியாலய  மாணவர்கள் இன்று புதன்கிழமை   காலை 08.00 மணிக்கு  பாடசாலைக்கு முன்பாக அமைதியான  முறையில்  தமது கண்டன சுலோகம்களை ஏந்தியவாறு கண்டன ஊர்வலத்தில் இடுபட்டிருந்தனர்  இவர்கள் தமது கண்டன சுலோகம்களில் 

"நீதி மன்றம் குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழக்குமா" 
"பென்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிப்போம் "
"சட்டக்களின் ஓட்டைகளை பயன்படுத்தி உற்றவாளிகளை தப்பிக்க விடாதீர்கள் "


போன்ற வாசகம்களை ஏந்தியவாறு கண்டன ஊர்வலத்தில் இடுபட்டிருந்தனர் 

Tuesday, 26 May 2015

கல்வியின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வு இன்றைய பெண்களிடம் அதிகமாக காணப்படுகின்றமை வரவேற்கத்தக்கது


வி.சுகிர்தகுமார்


கல்வியின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வு இன்றைய பெண்களிடம் அதிகமாக காணப்படுகின்றமை வரவேற்கத்தக்கது. அக்கல்வியை கற்பதற்காக அவர்கள் காட்டும் அக்கறை, ஆர்வம் அதனிலும் சிறப்பானது என ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி சித்ரா தேவராஜன் தெரிவித்தார்.
நேற்று(24)அக்கரைப்பற்று எல்சி பெண்கள் கல்லூhயில் இடம்பெற்ற சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று பல பெண்கள் சமூகத்தின் முன்னோடிகளாக, சமூகத்தின் நலனில் அக்கறையுடையவர்களாக திகழ்கின்றனர். சுயமாக சிந்தித்து செயலாற்றும் தனித்துவம் மிக்கவர்களாகவும் மாற்றம் அடைந்துள்ளனர் என்றார்.
பாடசாலை கல்வியுடன் தங்களை நிறுத்திவிடாது பெண்கள் இவ்வாறான பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்வதன் ஊடாக தங்களது வாழ்வை வளப்படுத்தி கொள்ளலாம் என்பதற்கு இதுவும் தக்கசான்று எனவும் குறிப்பிட்டார்.
மேலும் எல்சி பெண்கள் கல்லூரியில் கற்பிக்கப்படும் ஆங்கில கல்வி, அழகுக்கலை பயிற்சி ,தகவல் தொழில்நுட்பவியல் நெறிகளில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுக்கொள்ளுகின்ற இரு சமூகங்களையும் சார்ந்த மாணவிகளை பாராட்டுவதுடன் இக்கல்லூரி ஆற்றி வரும் பணிகளையும் பாராட்டினார்.
நிருவாக உத்தியோகத்தர் நியோமி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பல்வைத்தியர் திருசாந்தி கிரிதரன், மகாசக்தி தலைவி துளசிமணி மனோகரன் எல்சி பெண்கள் கல்லூரி பணிப்பாளர் கே.எல்.எம்.ஜசால் முகமட், எல்பிஏ கம்பஸ் பணிப்பாளர் ஏ.ஜி.எம் சாமில் , உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி நெறிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழையும், நினைவுச்சின்னத்தினையும் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில்  எல்சி பெண்கள் கல்லூரி பணிப்பாளர் கே.எல்.எம். ஜசால் முகமட் ஆற்றிவரும் சேவையை பாராட்டி கல்லூரி சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டா

மண்டூரில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

by-news1st 
மட்டக்களப்பு வெள்ளாவெளி மண்டூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
வீட்டில் இருந்தவர் மீதே இன்று முற்பகல் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது
சந்தேகபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் கைது

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு கோளாவில் பிரதேச வடிகான் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை திங்கட்கிழமை (25) இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலையடிவேம்பு, கோளாவில் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (22) வடிகான் ஒன்றிலிருந்து தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட நிலையில் ஆண் சிசுவொன்றை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்டெடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தார் இதனையடுத்து பொலிஸார், குறித்த சிசுவை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிறுவர் பராமரிப்புப் பிரிவில் ஒப்படைத்துள்ளனர்
.கைது செய்யப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வித்யாவின் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஸ்ன கல்லூரி மாணவர்கள்



மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஸ்ன கல்லூரி மாணவர்கள் இன்று செவ்வாக்கிழமை   மதியம் 12.30 மணிக்கு  பாடசாலைக்கு முன்பாக அமைதியாக  மெளனமான முறையில்  தமது கண்டன சுலோகம்களை ஏந்தியவாறு கண்டனத்தினை  தெரிவித்தனர்  இவர்கள் தமது கண்டன சுலோகம்களில்


 மாணவர்களக்கு  எதிரான வன்முறைகளை ஒழிப்போம்
பென்கொழுக் கெதிரான சட்டமூலத்தினை வலுப்படுத்துக்கள்
பெண்களை பெண்களாய் மதிப்போம் போன்ற வாசகம்களை ஏந்தியவாறு கண்டன ஆர்பாட்டத்தில் இடுபட்டிருந்தனர் 

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஐந்து பேர் கைது

வி.சுகிர்தகுமார்
அம்பாறை. அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிக்கம்பை மற்றும்  அக்கரைப்பற்று பிரதேசங்களில்  சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் ஐந்து பேர் திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸாரும்  இலங்கை மின்சாரசபையினரும்  இணைந்து மேற்கொண்ட  சோதனையின்போது,
அலிக்கம்பை பிரதேசத்தை சேர்ந்த மூவரும் அக்கரைப்பற்று பிரதேசத்தைச்  சேர்ந்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு ஒரு வருட கடூழிய சிறை

வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், திங்கட்கிழமை (25)  ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன், அந்நபருக்கு மூவாயிரம் ரூபாய் தண்டமும் விதித்தார்.அவருக்கு எதிரான வழக்குகள் இடம்பெற்று வந்த நிலையில், திங்கட்கிழமை(25) மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.
பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த நபரெருவர், அக்கரைப்பற்று இசங்காணிச்சீமை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சம்பளத்துக்கு வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி அந்த வீட்டிலிருந்த நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் அப்போது அக்கரைப்பற்று பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் குறித்த நபரை கைது செய்திருந்தனர்.

Monday, 25 May 2015

ஆலையடிவேம்பு மக்கள் மட்டும் மௌனம் காப்பது ஏன்..

வி.சுகிர்தகுமார்,..
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் இலங்கையின் பல்வேறு திசைகளிலும் கண்டனப்பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும்போது அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு மக்கள் மட்டும் மௌனம் காப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

பல்வேறுபட்ட பெண்கள் அமைப்புக்களும், சமூக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பாடசாலைகளும். இங்கு வாழும் மக்களும் சற்றேனும் உணர்வின்றி செயற்படுவது வேதனை தருவதாக சில வயது முதிர்ந்தவர்கள் முணுமுணுப்பது காதினில் அவ்வப்போது கேட்கின்றது.


கடல்கடந்த உறவுகளுக்கு அநீதி இழைக்கப்படும் போது அம்பாரை மாவட்ட மக்கள்; குரல் கொடுக்கின்றனர். ஆனால் நமது மண்ணில் நடந்த அநியாயத்திற்கு அமைதியாகவுள்ளனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
வடக்கில் வெளிப்படையாக நடந்தேறியுள்ள இச்சம்பவம் போல் கிழக்கில் மறைமுகமாக நடைபெற்றுள்ள சில சம்பவங்களையும் மக்கள் மறந்துவிடக்கூடாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் சில சமூகப்பெரியோர்களிடம் பேசிய போதிலும் யாரும் செவிசாய்க்கவில்லை என குறிப்பிடும் சில இளைஞர்கள், வெறுமனே அரசியலுக்கு மட்டும் அறிக்கைகள் விடும் அம்பாரை மாவட்ட அரசியல்வாதிகள் பலர் இதற்கு மட்டும் ஊமையானது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை பூனைக்கு மணிகட்டுவது யார் என்பதை எதிர்பார்த்தே பலரும் காத்திருப்பதான செய்திகளும் வெளியாகின்றது.
எது எவ்வாறாயினும் வித்தியா மரணம் தொடர்பில் புத்தளத்தில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் சகோதர சமூகங்களும் இணைந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுவரும் இவ்வேளை அம்பாரை மாவட்ட மக்கள் மாத்திரம் மௌனியாக மாறியுள்ளமை எந்த அளவிற்கு பொருத்தம் என்பதை அவர்களது நெஞ்சில் கைவைத்து அறிந்து கொள்ளட்டும்.

இதேவளை...

ePq;fs; NgrhjpUg;gJ epahakh? vDk; jiyg;gplg;gl;l Jz;L gpuRuk; MiyabNtk;gpd; gy;NtW gFjpfspYk; ,d;W Nghlg;gl;Ls;sd.

பட்டிநகர் கண்ணகி அம்மன் ஆலயம்

பட்டிநகர் கண்ணகி அம்மன் ஆலயம் 


தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவம்

நிலோஷ்..
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவம் இம் மாதம் 26.05.2015 செவ்வாய்க்கிழமை காலை திருக்கதவு திறந்து ஆரம்பமாகி 01.06.2014 திங்கட்கிழமை இரவு திருக்குளிர்ச்சி வைபவத்துடன் நிறைவு பெரும் .

31.05.2015  -  ஊர்வலம்



கைவிடப்பட்ட வீடொன்றின் முற்றத்திலிருந்து கைக்குண்டை மீட்ட பொலிஸார்


அம்பாறை, சம்மாந்துறை, 6ஆம் கிராம சேவகர் பிரிவிலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் முற்றத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை செயலிழக்கச் செய்ததாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை, வீட்டு வளவை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டு உரிமையாளரால் மேற்படி குண்டு அடையாளம் காணப்பட்டதை அடுத்து அது தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்குண்டை மீட்ட பொலிஸார், அம்பாறை பி.டி.எஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் இன்று காலை காரைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் வைத்து அக்குண்டை செயலிழக்கச் செய்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sunday, 24 May 2015

பொத்துவில் ஊரணி காட்டுப் பகுதியில் இடம்பெற்ற பஸ், மோட்டார் சைக்கிள் விபத்தில்

அம்பாறை மாவட்டம், பொத்துவில் ஊரணி காட்டுப் பகுதியில் இடம்பெற்ற பஸ், மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலே பலியான பரிதாபகரமான சம்பவம் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

 பொத்துவிலில் இருந்து கோமாரி நோக்கிச் சென்றவேளை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 கோமாரி – 01ஐச் சேர்ந்த சூரியதாசன் சுஜிஸ்தன் (வயது 19), அதே இடத்தைச் சேர்ந்த ஜோகராஜா கிருபாகரன் (வயது 18) ஆகிய இரு இளைஞர்களுமே இவ்விபத்தில் பலியாகியுள்ளனர்.
குறித்த பஸ் வண்டியின் சாரதி பொத்துவில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதுடன், உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வித்தியாவின் படுகொலை கண்டிக்கத்தக்க விடயமாகும்

news  coppy by tamilmirror  
-எஸ்.கார்த்திகேசு 
யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தினை கண்டித்து அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் சனிக்கிழமை (23) மாலை காரைதீவு பிரதேசத்தில் ஒன்று கூடிய வித்தியாவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டனர்.
பாடசாலை மாணவி வித்தியாவின் கொடூரமான துஷ்;பியோக கொலையானது இன்று உலகம் முழுவதும் வருந்தத்தக்க ஒரு விடயமாக இருப்பதடன் இச்சம்பவம் மனித குலத்தினை வெட்கி தலை குனிய வைத்த வெறுக்கதக்க ஒரு தும்பியல் சம்பவமாகும். 
இச்சம்வத்துடன் தொடர்புபட்ட அனைத்து சூத்திரதாரிகளையும் விரைவாக கைது செய்வதுடன் இவர்களுக்கான தண்டனைகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும். இனி இவ்வாறான சம்மவங்கள் இடம்பெறாது தடுக்கும் வகையில் பக்கச்சார்பின்றி தகுந்த தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த கொடூரமான படுகொலையாது இந்த நாட்டில் இறுதி சம்பவமாக அமைய வேண்டும். இவ்வாறான எந்தவொரு சம்மவமும் இடம்பெறாது இருப்பதற்கு இந்த கொலையாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள்; உதாரணமாக அமைய வேண்டும். 
அத்துடன் சட்டம் சரியாக தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கவதுடன் வன்முறைகளை மேற்கொள்ளாது அமைதியான முறையில் தமது கருத்துக்களையும் எதிர்ப்பினையும் வெளிக்காட்ட வேண்டுமென அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை வேண்டுகோள் விடுப்பதாக அந்த கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Friday, 22 May 2015

சிசு கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது

ஆண் சிசு  கைவிடப்பட்ட நிலையில் பெண்ணொருவரால் மீட்க்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று(22) நண்பகல் 12.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாம பிரதான வீதியில் அருகில் கோளாவில் பிரதேசத்தில் உள்ள வடிகானுக்குள் இருந்தே இச்சிசு மீட்க்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
  இது தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிசாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள

Thursday, 21 May 2015

கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சந்தேகநபர்கள் இருவரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள பட்டிமேடு கண்ணகி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சந்தேகநபர்கள் இருவரை, அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று புதன்கிழமை (20) கைது செய்ததாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஆலையடிவேம்பு புளியம்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின் இன்று வியாழக்கிழமை (21) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்திருட்டு சம்பவம் இம்மாதம் 1ஆம்; திகதி இரவு இடம்பெற்றதாகவும் இந்த மாதத்துக்குள் இதுவரை ஆலையடி வேம்பு பிரதேசத்தில் நான்கு கோயில்களில் உண்டியல் உடைத்து திருடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்தில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் பலி

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தம்பட்டை பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் பலியாகியுள்ளதாக, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பனங்காட்டைச் சேர்ந்த 35 வயதுடைய விநாயகமூர்த்தி விஜயகுமார் என்பவரே பலியாகியுள்ளார்.
தம்பட்டை பகுதியிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அருகில் சென்ற துவிச்சக்கரவண்டியுடன் மோதிக் கொண்டதினாலேயே, இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில், மூவர் படுகாயமடைந்த நிலையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும் இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Wednesday, 20 May 2015

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதேச அலுவலகம் அங்குரார்ப்பணம்

பிரேம்...


ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதிநிதிகளாகச் செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தனியானதொரு அலுவலகம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் இன்று, 20-05-2015 புதன்கிழமை காலை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளரது தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்த இவ்வைபவத்தில் சமய அனுஸ்டானங்களுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றிருந்தன.

ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட 22 கிராமசேவகர் பிரிவுகளுக்குமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜி.தயாபரன், கே.ரஞ்சித்குமார் மற்றும் கே.செல்வானந்தம் ஆகியோர் ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் இருபாலாரும் பூர்த்தி செய்துகொள்ளவேண்டிய அடிப்படைத் தேவைப்பாடுகள், பின்பற்றவேண்டிய சட்ட வரையறைகள் என்பன தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சார்பில் முகவர்களாகச் செயற்பட்டு அதன் பணிகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துபவர்களாகப் பணியாற்றிவருவதுடன், குறித்த பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடு சென்றவர்களின் குடும்ப நலநோம்பல்களைக் கண்காணித்து பிரதேச செயலாளரூடாக அமைச்சுக்கு அறிக்கையிடுபவர்களாகவும் செயற்பட்டுவருகின்றனர்.

இருப்பினும் தமது கடமைகள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினூடாக வெளிநாடு செல்வோரைச் சந்தித்தல், அவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இரகசியத்தன்மையினைப் பேணும்பொருட்டு தனியானதொரு அலுவலகம் தமக்கு அவசியமென ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதேச செயலக வளாகத்தில் அவர்களுக்குத் தனியான அலுவலகம் ஒதுக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டதுடன் இன்றைய நிகழ்வைச் சிறப்பிக்கும்வகையில் தெரிவுசெய்யப்பட்ட வருமானம் குறைந்த பெண்களுக்கு இலவச சேலைகளை அன்பளிப்பாக வழங்கும் வைபவம் அங்கு இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கணித விநாடி வினா போட்டிகள் இம்மாதம் சனிக்கிழமை 23ஆம் திகதி

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலய மட்ட கணித விநாடி வினா போட்டிகள் இம்மாதம் சனிக்கிழமை 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் கணித பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். யூசுப் தெரிவித்தார்.
இந்த போட்டிகள் அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் இப்போட்டியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தரம் 6 தொடக்கம் 12 வரையான மாணவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தரம் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 மணிக்கும் தரம் 9,10,11,12 மாணவர்களுக்கு காலை 10.30 மணிக்கும் இந்த போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சாத்திகள் இன்று (20) முதல் விண்ணபிக்க முடியும்

by---news 1st
இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சாத்திகள் இன்று (20) முதல் விண்ணபிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
பாடசாலை பரீட்சாத்திகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து குறித்த திகதிக்கு முன்னர் அதிபர் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட பரீட்சாத்திகள் மாதிரி விண்ணப்படிவத்திற்கு அமைய தமது விண்ணப்பங்களை நிரப்பி உரிய திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திகதிக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, 19 May 2015

துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வு

பிரேம்....

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரையப்பா நவரெட்ணராஜாவின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (18) மாலை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச மாணவ, மாணவிகள் 20 பேர் இலவச துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்ட இந்நிகழ்வில், வறிய மாணவர்களின் அவசியத்தேவை கருதி அவற்றை வழங்குவதற்கு முன்வந்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கு நன்றி தெரிவித்த பிரதேச செயலாளர், துவிச்சக்கரவண்டிகளை குறித்த மாணவர்கள் பெற்றுக்கொள்வதில் கரிசனையோடு செயற்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதன்போது 12 மாணவிகளுக்கும், 8 மாணவர்களுக்கும் ஒவ்வொன்றும் ரூபாய். 12,500.00 பெறுமதியான துவிச்சக்கரவண்டிகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வில் பிரதேச செயலகக் கணக்காளர் கே.கேசகன், அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் எஸ்.எல்.எம்.அன்வர், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.சி.எம்.ரகீப், சமுக சேவைகள் உத்தியோகத்தர் பொன்.சுந்தரராஜன், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிஷந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ரஞ்சன் மற்றும் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய அதிபர் கே.தட்சணாமூர்த்தி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Monday, 18 May 2015

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தம்மை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகளுக்காக ஆலையடிவேம்பு பொது மக்களினால் இன்று மாலை 06.00மணிக்கு ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசையுடன்  ஆத்ம சாந்தி சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்



முகாமையாளர் வீட்டில் திருட்டு

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோளாவில் பிரதேசத்தில் வசிக்கும் அருந்ததி மகேஸ்வரன் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று, கோளாவில் பிரதேசத்தில் திவிநெகும முகாமையாளர் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு பெறுமதியான பொருட்கள் உள்ளிட்ட பணம் திருடப்பட்டுள்ளது.
திருட்டுச் சம்பவத்தில் துவிச்சக்கரவண்டி, பெறுமதிமிக்க ரோச், அலைபேசி, உண்டியல், புதிய சிம்காட், உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களும் பணமும் திருடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sunday, 17 May 2015

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 4 பெண்கள் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 4 பெண்களை கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

 இலங்கை மின்சார சபையினருடன் திருக்கோவில் பொலிஸார் இணைந்து இன்று  ஞாயிற்றுக்கிழமை (17) மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அணிக்கு 11 பேர் கொண்ட 10ஓவர்கள் கொண்ட ஆர்.பீ.எல். மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி சம்பியனாக றோயல் சலஞ்சஸ் அணியினர் தெரிவாகினர்



தம்பிலுவில்  றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கரையோர பிரதேச விழையாட்டுக் கழகங்களை ஒன்றினைத்து அணிக்கு 11 பேர்  கொண்ட 10ஓவர்கள் கொண்ட  ஆர்.பீ.எல். மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் றோயல் சலஞ்சஸ் அணிக்கும் நைற்றேடஸ் அணியினருக்கிடையில் இடம் பெற்றது

இவ் நிகழ்வில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய  றோயல் சலஞ்சஸ் அணியினர் 81ஓட்டங்களை பெற்றிருந்தனர் இதனை எதிர்த்து ஆடிய நைற்றேடஸ் அணியினர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ஓட்டங்களை மட்டும் பெற்று றண்னராக தெரிவு செய்யப்பட்டதுடன் போட்டியின் வெற்றி சம்பியனாக றோயல் சலஞ்சஸ் அணியினர் தெரிவாகினர்

அபிலன்          - மேன் ஓப்த மெச் விளையாட்டு வீரராகவும்
தினுஷந்தன் - மேன் ஓப்த கிறாஸ் விளையாட்டு வீரராகவும்
அபிலன்     - பாஸ்டர் பிப்டி விளையாட்டு வீரராகவும்
இராச்பவன்  - ஹெட்றிக் விளையாட்டு வீரராகவும்

நிலோஸ் மற்றும் கவிதாஸ் வளந்து வரும் விளையாட்டு வீரர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்

7 அணிகள் மோதிக் கொண்ட இப் போட்டி தொடர்சியாக 4 தினங்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது

சூதாடிய நால்வர் கைது

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில்  சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். 

சூதாடுவதாக தங்களுக்கு கிடைத்த  தகவலை அடுத்து,  மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 


இந்தச் சந்தேக நபர்களை நாளை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சந்தேக நபர்களிடமிருந்து   காட்ஸ் பக்கெட் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை




இந்து சமய கலாச்சார அலுவல்கள் தினைக்களம் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்துடன் இனைந்து திருநாவுக்கரசு நாயனார் குருபூசையினை (17) பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில்  நடை பெற்றது


 இதில் பிரதேச மன்றத்தலைவர் வே.சந்திரசேகரம், கணகரெத்தினம் அருளுரையாளர் ரவிஜி மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவறாஞ் ஆலைய செயலாளர் மகபதி  உடன் அறனெறி மாணவர்களையும்  காணலாம்