Thursday, 31 December 2015

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின்

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு நேற்று இரவு  புதன்கிழமை (30)  மட்டக்களப்பு  கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் தலைவர் எல் . தேவஅதிரன் தலைமையில்  நடைபெற்றது

ஆலையடிவேம்பில் வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

திவிநெகும திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் தலைமையில் இன்று (31) காலை இடம்பெற்றது.


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திவிநெகும உதவிபெறுகின்ற, பெண் தலைமைதாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த, தையல் தொழிலைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட 31 பெண்கள் தமக்கான தையல் இயந்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளரோடு இணைந்து தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கணக்காளர் கே.கேசகன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.இராசஸ்ரீ ஆகியோர் குறித்த பயனாளிகளுக்கான தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தனர்.





Wednesday, 30 December 2015

மின் விளக்கு கம்பத்தினை பிடிங்கி எறிந்த பார ஊர்த்தி

இரவில்  மின் விளக்கு கம்பத்தினை பிடிங்கி எறிந்த பார ஊர்த்தி 

அம்பாறை கல்முனைபகுதியில் ,அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நேற்று இரவு(30) கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த பார ஊர்தி வேகக் கட்டுப்பாட்டினை இழந்து

கௌரவிக்கும் நிகழ்வு



ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இவ்வருடத்தில் (2015) இடமாற்றம் பெற்று வேறு அரச அலுவலகங்களுக்குச் சென்ற மற்றும் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களின் சேவைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் ஆண்டிறுதி விழாவும் இன்று (29) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

திருவெண்பாவை

பனக்காடு  பாசுபதேசுவரர் ஆலய திருவெண்பாவை நிகழ்வுகள்



Monday, 28 December 2015

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின்...

தகவல்:பத்மராஸ் கதிர்




காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் கழக இரவும் வருடாந்த கழக ஒன்றுகூடலும் 27.12.2015 அன்று, பிற்பகல் 6.30 மணியளவில், காரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தில் கழகத்தலைவர் திரு.எஸ்.தங்கவடிவேல் தலைமையில் ஆரம்பமானது.


Sunday, 27 December 2015

மினிசூறாவளி வீடுகள்இகடைகள் சேதம்

Displaying DSC_0304.JPG
திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் மினிசூறாவளி வீடுகள்இகடைகள் சேதம்



Displaying DSC_0304.JPGDisplaying DSC_0304.JPGஅம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவூக்குட்பட்ட விநாயகபுரம் 4 கிராம சேவகர் பிரிவில்இன்று (27) ஞாயிறு மாலை 4 மணியளவில் திடிரென வீதிய மினிசூறாவளியால் கிராமத்தில் வீடுகள், கடைகள் சேதமடைந்துள்ளது.

Saturday, 26 December 2015

சட்டவிரோதமாக ஆற்று மண்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் களியோடைப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி சட்டவிரோதமாக  ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் ,  

ஆழிப்பேரலையின் 11ம் ஆண்டு நினைவு

ஆழிப்பேரலையின் 11ம் ஆண்டு நினைவு ஆத்மசாந்தி பிரார்தனைகள் 

18 வயது இளைஞனொருவன் சடலமாக மீட்கப்பட்டு.....

பொத்துவில், பொலிஸ்  கோமாரி முருங்கந்தனை வயல் பிரதேசத்தில், வேளாண்மை காவலுக்குச் சென்ற 18 வயது இளைஞனொருவன்  சனிக்கிழமை (26) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்

Thursday, 24 December 2015

கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள்.

 அன்பென்ற மலையிலே அகிலங்கள் நனையவே அதி ரூபன் தோன்றினானே..."
tns-

ஏழ்மை, அடிமை தகர்ந்து தமிழ் மக்கள் உலக அரங்கில் படும் வேதனைகளை தளர்த்து சம அந்தஸ்துடன் உலக மக்கள் அனைவரும் வாழ வாழ்த்துவதுடன், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பனங்காடு  இணையத்தளத்தித்தின் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள்.

Wednesday, 23 December 2015

மோட்டார் சைக்கிள் மீட்ப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளக்காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அக்கரைப்பற்று பொலிஸார் இன்று புதன்கிழமை(23) மீட்டுள்ளனர். 

Monday, 21 December 2015

ஆலையடிவேம்பில் போஷாக்கிற்கான பிரதேசமட்ட செயற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்

அபிவிருத்தி தொடர்பான அரசின் கொள்கைகளுக்கமைய சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் போஷாக்குமிக்க வாழ்க்கைமுறையை முன்னேற்றமடையச் செய்தல் தொடர்பான சுதேச மருத்துவ அமைச்சின் கருத்திட்ட விதந்துரைப்புகளுக்கமைய ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளை ஆராய்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று (21) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Sunday, 20 December 2015

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற இயலாதோருக்கான இலவச உபகரணங்கள் வழங்கும் வைபவம்

கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழ்கின்ற இயலாதோருக்கும், விசேட தேவையுடையோருக்கும் இலவச உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச சமுக பராமரிப்பு நிலையத்தில் இன்று (21) காலை இடம்பெற்றது.

Thursday, 17 December 2015

ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தருக்கான பிரியாவிடை வைபவம்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நீண்டகாலங்கள் கடமையாற்றி கடந்த ஜூலை மாதத்தில் தனது சேவையிலிருந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் பூபாலபிள்ளை திருநாவுக்கரசு அவர்களுக்கான பிரயாவிடை வைபவம் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்று (17) நண்பகல் இடம்பெற்றது.

Wednesday, 16 December 2015

2015ஆம் ஆண்டில் 205 முறைப்பாடுகள்

 
பொத்துவில் பொலிஸ் நிலையத்தில்  2015ஆம் ஆண்டில் 205 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜி.யூ.வசந்தகுமார தெரிவித்தார். இப்பொலிஸ் நிலையத்தில் 2014ஆம் ஆண்டு 155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் சீர்திருத்தம் தொடர்பான கூட்டம், பொத்துவில் அல் ஹுதா பாடசாலை கூட்ட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். குடும்பப் பிரச்சினைகள் தொடர்பிலேயே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

Tuesday, 15 December 2015

ஆலையடிவேம்பில் வீடமைப்புக் கடனும் சீமெந்துப் பொதிகளும் வழங்கிவைப்பு

வீடமைப்பு மற்று நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரையின் அடிப்படையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சம்பத் செவன வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு வீடமைப்புக்காகத் தலா 10 சீமெந்து பக்கற்றுகளை மானிய அடிப்படையில் வழங்கிவைக்கும் நிகழ்வும், வீடமைப்புக் கடன்களுக்கான காசோலைகளை வழங்கும் வைபவமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (16) காலை இடம்பெற்றன.

Monday, 14 December 2015

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முருகன் ஆலயத்துக்கு பிரதேச செயலாளர் விஜயம்

நாட்டில் தற்போது பெய்துவரும் பருவமழையினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயாராமய பௌத்த விகாரையிலுள்ள முருகன் ஆலயத்தை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதேச செயலக அதிகாரிகளுடன் இன்று (14) நேரில் சென்று பார்வையிட்டார்.

Friday, 11 December 2015

வாழ்வாதார உதவி வழங்கல்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையமொன்றை நடாத்திவரும் சின்னப்பனங்காடு கிராமத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு காற்றமுக்கி (Air Compressor) இயந்திரமொன்றை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் வாழ்வாதார உதவியாக இன்று (11) வழங்கிவைத்தார்.

Thursday, 10 December 2015

ஆலையடிவேம்பு பிரதேச வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் - பிரதேச செயலாளர் கோரிக்கை

பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் அரச தொழிலொன்று எவ்வாறேனும் கிடைத்துவிடும் என்ற மனோநிலை இக்காலத் தமிழ் இளைஞர்களிடம் இப்போது இல்லை. இதற்குக் காரணம் கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளாலும் அச்சுறுத்தல்களாலும் படித்த தமிழ் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்புக்களைத் தேடி வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தது மட்டுமல்லாது எஞ்சியிருந்தவர்களில் குறிப்பிடத்தக்க சிலருக்கே போட்டிப்பரீட்சைகளின் ஊடாக அரச தொழில்கள் வழங்கப்பட்டதுமாகுமென பனங்காடு இணையத்தளத்துக்குக் கருத்துத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.



ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட சேவை பெறுனர் பட்டயம் தொடர்பான பயிற்சி

அம்பாறை மாவட்ட செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சேவை பெறுனர் பட்டயம் (Citizen Charter) தயாரித்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சி ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (10) இடம்பெற்றது.


Wednesday, 9 December 2015

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின வைபவங்கள்

அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் நாடு முழுவதிலுமுள்ள அரச நிறுவனங்களில் அனுஸ்டிக்கப்படும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின வைபவங்களின் தொடர்ச்சியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிகழ்வுகள் இன்று (09) காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றன.

Tuesday, 8 December 2015

பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி MTV ஊடக வலையமைப்பினால் ஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு

இலங்கை முழுவதும் கடந்த நவம்பர், 25 முதல் இம்மாதம் 10 ஆந்திகதி வரை முன்னெடுக்கப்பட்டுவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் தேசிய வேலைத்திட்டங்களுக்கு அமைய MTV ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு வைபவமொன்று இன்று (09) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Monday, 7 December 2015

ஆலையடிவேம்பில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு பயிற்சி

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் முன்பள்ளி ஆசிரியைகளின் திறன்களை மேம்படுத்தும் நோக்கோடு நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு பயிற்சி இன்று (07) காலை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Sunday, 6 December 2015

இடை விலகும் மாணவர்களுக்கு பெற்றோர் ,ஆசிரியரே காரணம்

இடை விலகும்   மாணவர்களுக்கு பெற்றோர் ,ஆசிரியரே காரணம் 

எங்கட ஊர்ல இருக்கிற பன்மூர் ஸ்கூல்ல படிக்கிற  பஸ்ஷன்க ஸ்கூலுக்கு போகாம கள்ள மொழிகிறதுக்கு முக்கிய காரணம் ரீச்சர் தான்


இவ்வாறு வேதனையுடனும் உருகத்துடனும் பன்மூர் பாடசாலையின் முன்னேற்றம் தொடர்பான அக்கறையுடனும் எதிர்பார்புடனும் தெரிவிக்கின்றார் லட்சுமன் கருனாநிதி

Friday, 4 December 2015

ஊஞ்சல் போட்டு விளையாடிய சிறுவன் உயிரிழந்தான்...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமம் 02  இல் இன்று (04) காலை  சிறுவன் ஒருவன் சணல்கயிற்றில் இறுகி பாரிதாபமாக மரணமடைந்தான்.


மரணமடைந்த சிறுவன்  8வயதுடைய மாணவன் என பொலிசார் தொரிவித்தனார் 

இது தொடர்பில் அறிய வருவதாவது இன்று பாடசாலைக்கு சென்ற மாணவன் வழமைபோன்று  பாடசாலை விட்டு வீடு திரும்பியபோது பாடசாலை புத்தக பொதியினை சுற்றும் சணல் ஒன்றினை கையில் எடுத்து வந்து வீட்டருகில் இருந்த மரமொன்றில் ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளான். 

ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டக் கல்வி வலயத்திலுள்ள பிரசித்தி பெற்ற கல்லூரியும் ஒரேயொரு தேசிய பாடசாலையுமான ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரியில் இவ்வருடம் ஆகஸ்டில் இடம்பெற்ற தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (04) காலை கல்லூரி முதல்வர் எம்.கிருபைராஜா தலைமையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

பனங்காடு கிராமத்தில் பெரும்போக விவசாயக் கடன்கள் வழங்கிவைப்பு

பனங்காடு கிராம அபிவிருத்தி அமைப்பின் மீளெழுச்சித் திட்டத்தின்கீழ் பெரும்போக விவசாயிகளுக்கு விவசாய வாழ்வாதாரக் கடனுதவி வழங்கும் நிகழ்வு அதன் தலைவர் பி.இராமநாதன் தலைமையில் இன்று (04) மாலை பனங்காடு மீளெழுச்சித் திட்ட கட்டடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பில் போஷாக்கிற்கான பிரதேசமட்ட செயற்பாட்டுக் குழு அமைப்பு

அபிவிருத்தி தொடர்பான அரசின் கொள்கைகளுக்கமைய சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் போஷாக்குமிக்க வாழ்க்கை முறையை முன்னேற்றமடையச் செய்தல் தொடர்பான சுதேச மருத்துவ அமைச்சின் கருத்திட்ட விதந்துரைப்புகளின் பிரகாரம் நாடு முழுவதும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டங்களில் போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழுக்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான குழு நேற்று (03) காலை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் உருவாக்கப்பட்டது.

Tuesday, 1 December 2015

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற முன்பள்ளி மாணவர்களுக்கான விடுகை விழா

(தியாஷினி)

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் எஸ்.ரி.ஏ.சொலிடாரிட்டி பவுண்டேஷன் நிறுவனத்தின் அனுசரணையோடு இயங்கிவருகின்ற அம்மன் மற்றும் லோட்டஸ் முன்பள்ளிகளிலிருந்து தமது பாலர் கல்வியினை முடித்து அடுத்த வருடம் முதல் அரச பாடசாலைகளுக்குச் செல்லவுள்ள சிறார்களுக்கான விடுகை விழாவும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவமும் நேற்று (01) மாலை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றன.

ஆலையடிவேம்பில் இளைஞர் சிரம சக்தி கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

(தியாஷினி)

இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையோடு தேசிய இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச சம்மேளனத்தினூடாக அளிக்கம்பையில் கரப்பந்தாட்ட மைதானமொன்றை அமைப்பதற்கான ஆரம்பநிகழ்வும் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள ஒரேயொரு தமிழ் தேசிய பாடசாலையான ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவமும் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் நேற்று (30) காலை இடம்பெற்றன.

சட்ட உதவி ஆணைக்குழுவின் உதவியோடு ஆலையடிவேம்பில் திருமணப் பதிவுகள் வழங்கிவைப்பு

(தியாஷினி)
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய திருமணப் பதிவுகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் தலைமையில் நேற்று (30) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.