அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளக்காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அக்கரைப்பற்று பொலிஸார் இன்று புதன்கிழமை(23) மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரு தினங்களாக குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை அவதானித்த பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய அவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் அண்மையில் அரசாங்கத்தினால் மானி அடிப்படையில் வழங்கப்பட்ட பஜாஜ் டிஸ்கவரி, நுP டீடீஏ 1851 எனும் இலக்கத்தைக் கொண்டதெனவும் இதன் உரிமையாளர் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த கே.சுதர்சன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் வாகனம் கடந்த திங்கற்கிழமை மாலை காரைதீவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போயிருந்ததை அறிந்த அதன் உரிமையாளர் இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்த நிலையில் இன்று அக்கரைப்பற்று பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment