Saturday, 26 December 2015

சட்டவிரோதமாக ஆற்று மண்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் களியோடைப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி சட்டவிரோதமாக  ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் ,  
 சனிக்கிழமை (26)  காலை  ஒருவரைக் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபரை   அக்கரைப்பற்று நீதிமன்றில்  ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

No comments: