திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் மினிசூறாவளி வீடுகள்இகடைகள் சேதம்
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவூக்குட்பட்ட விநாயகபுரம் 4 கிராம சேவகர் பிரிவில்இன்று (27) ஞாயிறு மாலை 4 மணியளவில் திடிரென வீதிய மினிசூறாவளியால் கிராமத்தில் வீடுகள், கடைகள் சேதமடைந்துள்ளது.
இவ்வாறு திடிரென வீசிய மினிசூறாவளியால் விநாயகபுரம் சிவன் ஆலயத்திற்கு முன்பாக செல்லும் வீதியில் அமைந்துள்ள குடியிருப்புக்களில் 2வீடுகள்இஒரு கடையூம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடை உற்பட 2வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வாழைகள் தென்னைமரங்கள் மற்றும் மரங்களும் காற்றினால் முறித்து எறியப்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பாக உடனடியாக கிராம சேவகர் திருக்கோவில் பிரதேச செயலாளருக்கு அறியப்படுத்தியதுடன் பிரதேச செயலாளர் அம்பாறை அனர்த்த முகாமைத்து பிரிவூக்கு தெரியப்படுத்தியூள்ளதாகவூம் அவர்கள் சம்பவ இடத்தினை பார்வையிட அனர்த்த முகாமைத்து அதிகாரிகள் வருகைதரவூள்ளதாகவூம் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தெரிவித்துள்ளார்.
இவ் மினிசூறாவளி பாரிய சத்தத்துடன் காற்று மேலெழுந்து சுமார் 150 அடிக்கு மேல் வீட்டில் கூரைகளை அள்ளி வீசியதாகவூம் இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் நிற்பதை காணக்கூடியதாக இருந்ததுடன் இந்த அனர்த்தத்தில் மூன்று ஆண்கள் காயமடைந்து திருக்கோவில் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவூம் அப்பகுதி கிராம சேவகர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment