Friday, 4 December 2015

ஊஞ்சல் போட்டு விளையாடிய சிறுவன் உயிரிழந்தான்...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமம் 02  இல் இன்று (04) காலை  சிறுவன் ஒருவன் சணல்கயிற்றில் இறுகி பாரிதாபமாக மரணமடைந்தான்.


மரணமடைந்த சிறுவன்  8வயதுடைய மாணவன் என பொலிசார் தொரிவித்தனார் 

இது தொடர்பில் அறிய வருவதாவது இன்று பாடசாலைக்கு சென்ற மாணவன் வழமைபோன்று  பாடசாலை விட்டு வீடு திரும்பியபோது பாடசாலை புத்தக பொதியினை சுற்றும் சணல் ஒன்றினை கையில் எடுத்து வந்து வீட்டருகில் இருந்த மரமொன்றில் ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளான். 

இதன்போதே தவறுதலாக கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கி  இத்துயரச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிவதாக அக்கரைப்பற்று பொலிசார்  தொரிவித்தனார்


சிறுவன் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது அவனின் தயார்  வீட்டினுள் மதிய சமையல் வேலைகளில் ஈடுபட்டு இருந்ததாகவூம் பின்னார்  உணவூ வழங்குவதற்காக வெளியில் வந்து பார்த்தபோதே இவ்வாறு நடைபெற்றுள்ளதை அவதானித்துள்ளதாகவூம் அயலவார்களின் உதவியோடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் உயிரிழந்துள்ளதாகவூம் தொரி விக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மருத்துவ பாரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனா.

No comments: