Thursday, 31 December 2015

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின்

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு நேற்று இரவு  புதன்கிழமை (30)  மட்டக்களப்பு  கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் தலைவர் எல் . தேவஅதிரன் தலைமையில்  நடைபெற்றது  


இவ் ஒன்று கூடலில் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது எதிர்கால செய்தி சேகரிப்புகள் அபிவிருத்தி செய்திகளின் ஆக்கம்கள் சிறப்பு விபரணக் கட்டுரைகளின் தொகுப்பாக்கம் வியாபார செய்திகளின் சேகரிப்பும் அபிவிருத்தியில் இதன் பங்களிப்புக்கள் உடன் ஊடகவியலளர்களது நலன் பேனும் திட்டம்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது 

விசேடமாக ஊடகவியலாளர்களது இலவச போக்குவரத்து முறை தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு எதிர்கால புலமைபரிசில் திட்டம் கள் பெற்றுக் கொடுத்தல் , தேசிய நிறுவனங்களுடன் இணைந்து  ஊடக பயிற்சிகளை பெற்றுக் கொடுத்தல்,  சமுகம் சார் செயற்பாடுகளில் ஈடுபடுத்தல்,  இலத்திரனியல் பயிற்சிவகுப்புக்களை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும்   தலைவர் எல் . தேவஅதிரன்  உரையாற்றி இருந்தார் 

No comments: