Friday, 11 December 2015

வாழ்வாதார உதவி வழங்கல்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையமொன்றை நடாத்திவரும் சின்னப்பனங்காடு கிராமத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு காற்றமுக்கி (Air Compressor) இயந்திரமொன்றை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் வாழ்வாதார உதவியாக இன்று (11) வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கணக்காளர் கே.கேசகன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி. சுதர்சினி சிவகுமார், கே.லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.





No comments: