Saturday, 26 December 2015

ஆழிப்பேரலையின் 11ம் ஆண்டு நினைவு

ஆழிப்பேரலையின் 11ம் ஆண்டு நினைவு ஆத்மசாந்தி பிரார்தனைகள் 



அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிதேசங்களில் இன்று சுனாமி அனர்த்தத்தின் உயிர் நீத்த உடமைகளை இழந்த உறவுகளின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள்  இன்று காலை முதல் கல்முனை ,நிந்தவூர், காரைதீவு , சந்தமருது ,ஒலுவில் அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று ,தம்பட்டை,தம்பிலுவில் திருக்கோவில் ,விநாயகபுரம், கோமாரி ,பொத்துவீல் ,உல்லை பிரதேசங்களில்   அனைத்து இந்து ஆலயம்களிலும் , கிருஸ்தவ தேவாலயம்களிலும் ,பெளத்த விகாரைகளிலும்  ,இஸ்லாமிய பள்ளிகளிலும் விசேட பூசை  ஆராதனை நிகழ்வுகள் இடம் பெற்றன 

இதே வேளை சுனாமி நினைவு தூபிகளின் முன்பாகவும் உறவினர்கள் மலரஞ்ச்சலி செலுத்தியதுடன் 

இவர்களின் ஆத்ம சாந்திக்காக தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஏற்பாட்டில் அன்னதான நிகழ்வும் இன்று மதியம் இடம்பெறுகின்றது 

No comments: