பனங்காடு
கிராம அபிவிருத்தி அமைப்பின் மீளெழுச்சித் திட்டத்தின்கீழ் பெரும்போக விவசாயிகளுக்கு
விவசாய வாழ்வாதாரக் கடனுதவி வழங்கும் நிகழ்வு அதன் தலைவர் பி.இராமநாதன் தலைமையில்
இன்று (04) மாலை பனங்காடு மீளெழுச்சித் திட்ட கட்டடத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதேச
செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம அலுவலர்களுக்கான நிருவாக
உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ரஞ்சன், கிராம
அபிவிருத்தி அமைப்பின் சமுக உணர்வூட்டாளர் எஸ்.விமலதாஸ் மற்றும் சமுக வளவாளர்
ஆர்.ஜெயப்பிரியா உட்பட பனங்காடு கிராம அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்களும்
விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில்
பிரதேச செயலாளர் தலைமையில் மொத்தம் 46 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 1.4
மில்லியன் ரூபாய்கள் 6 மாதகாலத் தவணை அடிப்படையில் கடனாக வழங்கிவைக்கப்பட்டது. இக்கடன்
தொகை குறித்த விவசாயிகளால் பெரும்போக அறுவடையின் பின்னர் மீளச்செலுத்தவேண்டிய
முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment